நடிகர் விஜய்யின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். மேலும் அவரது பிறந்தநாளை விஜய் ரசிகர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நலதிட்ட உதவிகள் மற்றும் பொது பணிகளில் முன்னெடுத்து கொண்டாடி வருகின்றனர் வருகின்றனர்.
அப்படி ஒரு ஐடியாவே இல்ல… அப்பா மீது கடும் கோபத்தில் பிரபல இயக்குநர்!
இந்நிலையில் நாமக்கல்லில் விஜய் மக்கள் இயக்க மேற்கு மாவட்ட இளைஞரணியினர் 1008 பேருக்கு அன்னதானம் வழங்கினர். நாமக்கல் பெய்யேறிக்கரை பகுதியில் நடைப்பெற்ற இந்த அன்னதானத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வரிசையில் நின்று உணவினை பெற்றுச் சென்றனர். அதேபோல் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு மற்றும் பேனாக்களை வழங்கினார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இதேபோல் நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள தனியார் ரத்த வங்கியில் விஜய் மக்கள் இயக்க மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் ரத்த தான முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வமுடன் ரத்ததானம் செய்தனர்.