கேப்டன் விஜயகாந்த்துக்கு பத்ம பூஷன் விருது.. ரசிகர்கள் நெகிழ்ச்சி

0
629
Padma Bhushan Vijayakanth - கேப்டன் விஜயகாந்த்துக்கு பத்ம பூஷன் விருது.. ரசிகர்கள் நெகிழ்ச்சி

சென்னை: மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி விஜயகாந்த்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. கேப்டனுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதை அடுத்து அவரது ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் விஜயகாந்த்தை நினைவுகூர்ந்துவருகின்றனர்.

ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோர் பீக்கில் இருந்தபோது சினிமாவுக்குள் நுழைந்து தனக்கென தனி ரசிகர் படை சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியவர் விஜயகாந்த். அவ்வாறு அவர் அப்படி செய்தது சாதாரண விஷயமில்லை என்பது பலரும் ஒத்துக்கொண்ட உண்மை. அதுமட்டுமின்றி பலருக்கும் விஜயகாந்த் பல உதவிகளை செய்திருக்கிறார்.

கெத்து கேப்டன்: ரசிகர்களால் கேப்டன், புரட்சி கலைஞர் என்று அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். கேப்டன் என்ற பட்டத்துக்கு உரிய முறையில் பல விஷயங்களை தனியாளாக வழி நடத்தியவர் அவர். சிவாஜியின் இறப்பில் கூட்டத்தை ஒற்றை ஆளாக கட்டுப்படுத்தியது, ஏதேனும் பிரச்னை என்றால் எதற்கும் யாருக்கும் அஞ்சாமல் முதல் ஆளாக களத்தில் குதிப்பது, நட்சத்திர கலை விழாவை திறம்பட நடத்தி காண்பித்தது என அவர் உண்மையில் கேப்டன் தான் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறிவருகிறார்கள்.
எதிர்க்கட்சி தலைவர்: நடிகர் சங்க தலைவராக கெத்து காண்பித்த விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போது அதிமுகவுடன் எழுந்த மோதலை அடுத்து சில எம்.எல்.ஏக்கள் தேமுதிகவிலிருந்து விலகினர். இதனால் ரொம்பவே அப்செட்டான விஜயகாந்த் அப்போதிருந்தே மன உளைச்சலில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் சொல்வதுண்டு. மேலும் அந்த சமயத்திலிருந்துதான் அவருக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டது.

உயிரிழப்பு: உடல்நிலை சரியில்லாமல் போனதிலிருந்து ஆக்டிவ் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர் ரசிகர்களை அவ்வப்போது சந்திப்பதை மட்டும் வழக்கமாக வைத்திருந்தார். இந்த சூழலில் அவருக்கு மீண்டும் கடந்த மாதம் உடல்நலம் சரியில்லாமல் போனது. அதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து அவரின் உடல் முழு அரசு மரியாதையுடன் தேமுதிக அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பத்ம பூஷன் விருது: இந்நிலையில் மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2024ஆம் ஆண்டுக்கான பத்ம பூஷன் விருது விஜயகாந்த்துக்கு வழங்கப்படவிருக்கிறது. அதேபோல் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டிருக்கிறது. விஜயகாந்த்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டதை அடுத்து அவரது ரசிகர்கள் நெகிழ்ச்சியோடு விஜயகாந்த்தை நினைவுகூர்ந்துவருகின்றனர்.

முன்னதாக ஆண்டுதோறும் இந்திய குடியரசுத் தலைவர் தலைமையில் நடத்தப்படும் நிகழ்ச்சியில் பத்ம விருதுகள் வழங்கப்படும். மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்த விழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 2024ஆம் ஆண்டுக்கு மொத்தம் 132 பத்ம விருதுகள் வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here