பன்னாட்டு யோகா நாள் (International Yoga Day) ஆண்டுதோறும் சூன் 21 ஆம் நாள் கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது.
ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஐநா பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27 அன்று வலியுறுத்தி உரையாற்றியிருந்தார். சூன் 21 ஆம் நாளை அவர் இதற்காகப் பரிந்துரைத்திருந்தார். இரண்டு கதிர்த்திருப்பங்களில் ஒன்று நிகழும் இந்நாள், வடக்கு அரைக்கோளத்தில் மிக நீண்ட நாளாகவும் உள்ளது. பல உலக நாடுகளில் இந்நாள் ஒரு குறிப்பிடத்தக்கதாகவும் உள்ளது என அவர் தெரிவித்தார்.அமெரிக்கா, கனடா, சீனா உட்படப் பல உலக நாடுகள் நரேந்திர மோதியின் பரிந்துரையை ஆதரித்தன.
2014 டிசம்பர் 11 அன்று 193-உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபை சூன் 21 ஆம் நாளை ‘பன்னாட்டு யோகா நாளாக’ அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.
உடல் மற்றும் மனம் இரண்டுமே ஒருங்கிணைந்து, செயல்பட, உடல் ஆரோக்கியமாக இருக்க, நோய்களைத் தடுக்க, மூப்பைத் தடுக்க, என்று பல விதங்களில் யோகாசனம் உதவுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. உடல் மற்றும் மனம் இரண்டுமே ஒருங்கிணைந்து, செயல்பட, உடல் ஆரோக்கியமாக இருக்க, நோய்களைத் தடுக்க, மூப்பைத் தடுக்க, என்று பல விதங்களில் யோகாசனம் உதவுகிறது. பல நூறு ஆண்டுகளுக்கு ஆண்டுகளுக்கு முன்பே மக்களின் வாழ்வில் ஒன்றிணைந்த யோகாவின் நன்மைகளும், யோகா பயிற்சிகள் செய்வதால் ஏற்படும் மாற்றங்களும் மீண்டும் மக்களிடையே பரவத் தொடங்கியுள்ளது.
இந்தியாவின் பாரம்பரியமான யோகாசனம், வெளிநாட்டவர்களிடையே மிகவும் பிரபலமாகியது. மேற்கத்திய நாட்டைச் சேர்ந்தவர்களும் யோகாசனத்தை முறையாகக் கற்று தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளனர். யோகாசனப் பயிற்சிகளின் முக்கியத்துவத்தை அனைவரிடமும் கண்டு சேர்ப்பதற்காக இந்திய பிரதமர் நரேந்தர மோடி, ஐநா சபையில் இதற்காக ஒரு நாள் ஒதுக்கப்பட்டு கொண்டாடப்பட வேண்டும் என்று முன்மொழிந்தார்.
அதையொட்டி, 2014 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையில் ஜூன் 12 ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
யோகா என்பது ஒன்றிணைத்தல் அல்லது ஒரு முகப்படுத்துதல் என்று கூறப்படுகிறது. யோகாசன பயிற்சிகள் எட்டு பாகங்களாக, அதாவது அங்கங்களாகப் பிரிக்கலாம். எனவே, யோகா என்பது ஆசனங்கள் மட்டும் அல்ல. அவசர கதியில் செல்லும் வாழ்க்கையில், உடல் நலமில்லாமல் போவது கூட தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, மன அழுத்தம் மனச்சோர்வு (டிப்ரஷன்), படபடப்பு, போன்றவை மற்றும் இளம் வயதிலேயே உடல் பருமன், குறைபாடு ஆகியவை பரவலாகக் காணப்படுகிறது. வாழ்க்கை முறை நோய்களும் குறைபாடுகளும் அதிகரித்து வருகிறது.
உதாரணமாக, உலக நாடுகளில் அதிகமாக சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்களில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் இத்தகைய மோசமான நிலை இல்லை. சர்க்கரை நோய்க்கு காரணமாக உணவுப் பழக்கமும், வாழ்க்கைமுறையும் கூறப்படுகிறது. சில நோய்களை மற்றும் disorders என்ற குறைபாடுகளை வரும்முன் மட்டுமே தடுக்க முடியும். அதில் சர்க்கரை நோயும் ஒன்று. யோகா பயிற்சியை அன்றாடம் செய்யும் போது, ஹோலிஸ்டிக் ஹெல்த் எனப்படும் தலை முதல் கால்வரை உடலும், மனமும் ஆரோக்கியமடைகிறது.
பிரதமர் மோடி, யோகா தினம் அறிவிகப்பட்ட பொதுக் கூட்டத்தில், “யோகா என்பது உடலையும் மனதையும், எண்ணத்தாலும், செயலாலும் ஒருங்கிணைக்கும் கருவி. கட்டுப்படுத்திக் கண்டே மனதிருப்தி அடையவைக்கிறது; இயற்கையையும் மனிதனையும் இணைக்கும் பாலம்; உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கான ஹோலிஸ்டிக் முறை; யோகா பயிற்சி என்பது உடற்பயிற்சி கிடையாது, ஆனால் உங்களை நீங்களே கண்டுகொள்வதற்கும், உங்களுக்கும் இயற்கைக்கும் மற்றும் உலகத்துக்கும் உள்ள தொடர்பை அறிவதற்கும் உதவும் ஒரு அற்புதமான கருவி” என்று கூறினார்.
கருத்தரிப்பதில் கோளாறு, தசை வீக்கம் அல்லது வலுவின்மை, ஹார்மோன் குறைபாடுகள், உடல் சூடு, தீவிரமான ஸ்ட்ரெஸ், எடை குறைப்பு, பாலியல் குறைபாடுகள் என்று எந்த விதமான பாதிப்புகள் என்றாலும், யோகா பயிற்சிகள் செய்யும் போது தீர்வாக அமையும். யோகாசனப் பயிற்சிகளை அன்றாட வாழ்வில் ஒருங்கிணைப்பதால் உடல் நலம் மட்டுமல்லாமல், மன ரீதியான பிரச்சனைகளும் இல்லாமல், நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ முடியும்.