How To Solve Dandruff Problem Naturally | Tips to remove dandruff | பொடுகு தொல்லை போக்க உங்களுக்கான நிரந்தர தீர்வு இதோ..!

0
2434
tips to remove dandruff

What is Dandruff :

தலைப்பொடுகு (dandruff) என்பது தலையில் உள்ள சருமத்தின் இறந்த செல்களை உதிர்தல் ஆகும்.சருமத்தின் செல்கள் இறக்கும்போது அவை உதிர்வது சாதாரணமான நிகழ்வுதான். தலையினை சுத்தம் செய்த பிறகு சுமார் ஒரு சதுர சென்டி மீட்டரில் 4,87,000 செல்கள் உதிர்க்கப்படும்.

ஆனால் சில மக்களுக்கு வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் இந்த உதிர்தல் ஏற்படும். இது காலம் காலமாக தொடர்வதாக இருக்கலாம் அல்லது சில தூண்டுதல் காரணிகளால் ஏற்படக்கூடும். இதன் விளைவாக சுமார் ஒரு சதுர சென்டி மீட்டரில் 8,00,000 செல்கள் உதிர்க்கப்படலாம்.

இதன் காரணமாக சிவத்தல் மற்றும் எரிச்சல் சேர்ந்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இது அதிகமாக நெற்றி, மூக்கு மடிப்பு, காது பின்புறம் மற்றும் தலையில் அதிகமாக தலையில் வெள்ளைச் செதில்களாக (Seborrheic dermatitis) ஏற்படும்.

இந்த இன மக்கள், இந்தப் பகுதியினைச் சேர்ந்த மக்கள் என்றில்லாமல் அனைத்து பகுதிகளிலும் வாழும் மக்களை இந்த பொடுகு பாதிக்கிறது. பொதுவாகவே, பூப்படைந்த வயதிற்கு பின் உள்ள வாழ்வுக் காலங்களில் ஆண், பெண் பாரபட்சமின்றி இந்த பொடுகு பாதிப்பு ஏற்படுகிறது.

ஏறக்குறைய மக்கள் தொகையில் பாதியளவிற்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இது பொதுவாக அரிப்பினை ஏற்படுத்தக் கூடியது. முதிர்ந்த சிவப்பணுக்கள் இந்த பொடுகுத் தோற்றத்தில் முக்கியப் பங்குவகிக்கின்றன. பொடுகுத் தொந்தரவின் அளவுகள் சராசரியாக இருப்பினும் காலங்களைப் பொறுத்து இதன் பாதிப்பு சற்று மாறுபடுகிறது. முக்கியமாக குளிர்காலங்களில் அதன் பாதிப்பு அதிகமாகவே உள்ளது. பொடுகுத் தொந்தரவின் பல பாதிப்புகளை சில ஷாம்பு வகைகளைக் (முடியினை சுத்தம் செய்யும் பொருள்) கொண்டு தீர்க்க முடிந்தாலும், இதற்கு உண்மையான சிகிச்சை இல்லை.

பொடுகுப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் உளவியல் மற்றும் உடலியியல் ஆகிய இரு வழிகளிலும் தங்களை பரிசோதிக்க வேண்டும்.

தலையில் அரித்தல் மற்றும் சில தொந்தரவுகள் ஏற்படுவதே பொடுகுத் தொல்லையின் அறிகுறிகளாகும். சிவப்பு மற்றும் சற்று அரிப்பு ஏற்படுவது போன்ற சருமத்தின் உணர்ச்சிகள் போன்றவையும் இதன் அறிகுறிகள் ஆகும்.

  • அழுத்தம் – அதிகப்படியான மன அழுத்தம் தரும் வேலைகள் மற்றும் செயல்கள், அதிர்ச்சி தரும் செயல்கள், விஷயங்கள்
  • ஒரு பொதுவான தோல் நிலை – ஊறல் தரும் தோல் ஒவ்வாமை, இதனால் எண்ணெய் பிசுபிசுப்பு கொண்ட சருமம் ஏற்படும்.
  • தேவையற்ற பொருட்கள் – முடியினை தேவையற்ற பல பொருட்கள் கொண்டு சுத்தப்படுத்துவது. அதிகப்படியான மற்றும் அளவுக்கதிகமான பயன்பாட்டு பொருட்களால் பொடுகு ஏற்படும் வாய்ப்புள்ளது.
  • போதிய சுகாதாரம் இல்லாதது – போதுமான அளவிற்கு ஷாம்பூ பயன்படுத்தாது முடியினை சரியாக பராமரிக்கவில்லையெனில், தலையில் உள்ள சருமம் உதிர்ந்து விழத்தொடங்கும். இதன் காரணமாக சருமத்தின் எல்லையில் உள்ள செல்கள் இறக்கும் பின்னர் அதன் விளைவாக பொடுகு பிரச்சினை ஏற்படும்.
  • குளிர் மற்றும் உலர்ந்த குளிர்காலச் சூழ்நிலைகள்
  • பூசண பீடிப்பு (Povale)
  • சொரியாஸிஸ் (சிவப்பு நிறத்துடன் அரிப்பு மற்றும் சில திட்டுகள் ஏற்படுதல்).

பொடுகை போக்கவும் இயற்கையான வழிமுறை : 

உஷ்ணம் நீக்கும் வெந்தயம்

வெந்தயத்தை தலைக்குதேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைந்து பொடுகுத் தொல்லை தீரும். மிளகுதூளுடன் பால் சேர்த்து தலையில்தேய்த்து சில நிமிடங்கள் ஊறியபின் குளித்தால், “பொடுகு தொல்லை நீங்கும்”. தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகுபிரச்னை நீங்கும்.

பாசிப்பயறு, தயிர்

பாசிப்பயிறு மாவு மற்றும் தயிர் கலந்து தலையில் உறவைத்து பின்னர் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.கற்றாழை சாற்றை தலையில் மேல் தோலில்தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்துகுளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும்.

வேப்பிலை, துளசி

பூச்சித்தாக்குதலினால் பொடுகு ஏற்படுவது இயற்கை. எனவே அந்த மாதிரி நேரங்களில் ரசாயன ஷாம்புகளை பயன்படுத்துவதை தவிர்த்து வேப்பிலை கொழுந்து துளசி ஆகியவற்றை மைய அரைத்து தலையில் தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளித்தால் பொடுகுதொல்லை நீங்கும். துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்து கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.

வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறையும். எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய்எண்ணெய் கலந்து தலையில்தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம்பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சைபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்புபோட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.

தலைக்கு குளிக்கும்போது, கடைசியாக குளிக்கும் தண்ணீரில் சிறிதளவு வினிகர் சேர்த்து குளிக்கலாம்.

மருதாணி இலை தூள்

வாரம் ஒருமுறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தலையில் தேய்த்தால், பொடுகுதொல்லை நீங்கும். நெல்லிக்காய் தூள், வெந்தயப்பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிதுநேரம் கழித்து குளிக்கவேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவர பொடுகு நீங்கும்.

தேங்காய் பால்

தேங்காயை அரைத்து பால் எடுத்து அதை தலையில் நன்றாக தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு மறைந்துவிடும். கூந்தல் பள பளக்கும்.

முதல்நாள் சாதம்வடித்த தண்ணீரை எடுத்துவைத்து, மறுநாள் அதை எடுத்து வைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம். முட்டை வெள்ளைக் கரு, தயிர், எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகுமறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here