Reasons-why-your-joints-hurt-in-winter

0
1238

வானிலை மாற்றங்களால் கூட சிலருக்கு உடம்பில் வலி உண்டாகிறது. அதிலும் குளிர்காலத்தில் வெப்பநிலை குறையும் போது பெரும்பாலோனோர் மூட்டு வலிகளால் அவஸ்திப்படுகிறார்கள். ஏன் குறிப்பாக குளிர்காலத்தில் மூட்டு வலி அதிகம் ஏற்படுகிறது என்று யோசித்து இருக்கோமா? மூட்டு வலிக்கும் குளிர்காலத்திற்கும் என்ன சம்பந்தம்?

நமது உடலில் கால்சியம் பற்றாக்குறையும் மூட்டு வலி அதிகமாக வரக் காரணமாக அமைகிறது. மேலும் குளிர்காலத்தில் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றம் மூட்டுகளைச் சுற்றியுள்ள நரம்புப் பகுதிகளில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த வீக்கங்கள் அப்படியே மூட்டு வலியை உண்டாக்கி விடுகின்றன. இதைப் பற்றி நாம் இப்பொழுது விரிவாகக் காணலாம்.

குறைந்த காற்றழுத்தம் குளிர் காலத்தில் காற்றில் உள்ள அழுத்தம் குறைய ஆரம்பித்து விடுகிறது. இதனால் மூட்டுகளில் அமைந்துள்ள வாயு மற்றும் திரவ மூலக்கூறுகளை விரிவடையச் செய்கிறது. இந்த மூலக்கூறுகள் விரிவடையும் போது நரம்புகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. இதனால் தீராத மூட்டுவலி உண்டாகிறது. காயமடைந்த பகுதிகளில் உள்ள கிழிந்த திசுக்களும் விரிவடைந்து மூட்டு வலியை அதிகப்படுத்துகின்றன.

உடற்பயிற்சி செய்யாதிருத்தல் குளிர்காலத்தில் நாள் முழுவதும் சோம்பேறித்தனம் தோன்றும். நாமும் போர்வைக்குள் முடங்கியே கிடப்போம். ஆனால் இது உண்மையில் உடம்பிற்கு மிகவும் தீங்கானது. இப்படி நீண்ட நேரம் ஒரே இடத்தில் அசையாமல் இருப்பது உடம்பிற்கு விறைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் மூட்டுகள் கடினமாகவும் வேதனையாகவும் மாறுகிறது.

வைட்டமின் டி அளவு குறைதல் குளிர்காலத்தில் வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும். மேலும் சூரியனிடமிருந்து நமக்கு போதுமான வைட்டமின் டி கிடைக்காது. வைட்டமின் டி தான் எலும்பு மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. வைட்டமின் டி தான் உணவில் உள்ள கால்சியம் சத்தை உறிஞ்சி ஆரோக்கியமான எலும்பின் வளர்ச்சிக்கு உதவி செய்கிறது. எனவே மூட்டுகளுக்கு சிறுதளவு சூரிய ஒளி கிடைக்க வேண்டும். ஆனால் குளிர்காலத்தில் அவ்வாறு கிடைக்காமல் போவதால் மூட்டுகள் பலவீனமடைந்து வலி உண்டாகிறது.

மன அழுத்தம் குறிப்பாக குளிர்காலத்தில் நமக்கு மன அழுத்தமும் ஏற்படக் கூடும். இதற்கு காரணம் குறைவான வைட்டமின் டி மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. வைட்டமின் டி எலும்புகளுக்கு மட்டுமல்ல நம் மனநிலையை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது. இப்பொழுது மன அழுத்தம் வேறு மூட்டு வலியை பற்றி மேலும் கவலைப்பட வைத்து விடுகிறது.

இரத்த ஓட்டம் குறைதல் குளிர்காலத்தில் நமது உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்காது. இதயத்திலிருந்து மற்ற உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் குறைவாக இருக்கும். இதனால் மூட்டு பகுதிகளில் இரத்த ஓட்டம் குறைந்து விறைப்பை ஏற்படுத்தும்.

உணவு மாற்றங்கள் குளிர்காலத்தில் நீங்கள் உணவில் செய்யும் மாற்றங்கள் கூட மூட்டு வலிக்கு காரணமாக அமைகின்றன. குளுக்கோசமைன் மற்றும் காண்ட்ராய்டின் போன்ற ஊட்டச்சத்துக்களைச் சேர்ப்பது உங்கள் மூட்டுகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது. இவை மூட்டுகளுக்கு வலிமையை கொடுத்து வலியை குறைக்கிறது. குளிர்காலத்தில் மூட்டுச் சிக்கல்கள் ஏற்பட மேற்கண்ட காரணிகள் காரணமாக அமைகின்றன. உங்களுக்கு மூட்டு வலி தீவிரமாக இருந்தால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. மூட்டு வலி அதிகமாக இருக்கும் போது, அது லூபஸ், ஆர்த்ரிடிஸ், முடக்கு வாதம் போன்ற மிகக் கடுமையான பிரச்சனையாக கூட இருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here