இப்போ வரும்
அப்போ வரும் என்று
பல நாட்கள் அல்ல
பல மாதங்கள் தள்ளி
போய் பல வருடங்களாக
மாறி தற்போது வேல்ஸ்
நிறுவனத்தின் முயற்சியால்
வெளியாகி இருக்கும்
படம் தான் “எனை நோக்கி பாயும்
தோட்டா “. எனை நோக்கி
பாயும் தோட்டா படத்தை
இயக்கியுள்ளார் கௌதம்
வாசுதேவ் மேனன்
.இந்த படத்தை கௌதம்
மேனன் ,வெங்கட் சோமசுந்தரம்,ரேஷ்மா கட்டாளா ஆகியோர்
இனைந்து தயாரித்து
உள்ளனர் ,படத்தை
வேல்ஸ் நிறுவனம் ஜசரி
கனேஷ் வெளியிட்டுள்ளார்.படத்தில்
தனுஷ் ரகு என்ற
கதாபாத்திரத்தில் நடித்து
இருக்கிறார் ,மேகா
ஆகாஷ் லேகா என்ற
கதாபாத்திரத்தில் நடித்து
இருக்கிறார்,சசிகுமார்
திரு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்,செந்தில்
வீராசாமி பட
தயாரிப்பாளராக நடித்து
உள்ளார் .படத்திற்கு
தர்புகா சிவா
இசையமைத்துள்ளார் .படத்திற்கு
ஒளிப்பதிவு செய்துள்ளனர்
ஜோமன் டி ஜான்
,மனோஜ் பரமஹம்ஷா ,எஸ்.ஆர்.கதிர்.
நீண்ட வருடங்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த படம்
எனை நோக்கி பாயும்
தோட்டா ,தனது காதலியுடன்
2016ல் இந்த படம்
பார்க்க நினைத்ததவர்கள் தற்போது கல்யாணம்
ஆகி குழந்தைகளுடன் பார்க்க
போகிறார்கள் என
படத்தை பற்றிய மீம்
திருவிழாக்கள் நேற்றே
சமூக வலைத்தளங்களில் துவங்கி
விட்டது ,இதை
வைத்தே இளைஞர்கள் இந்த
படத்தை எவ்வளவு எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர் என்பதை
நாம் புரிந்து கொள்ள
முடிகிறது ,மேலும்
இந்த படத்தின் விளம்பரத்திற்காக வெளியிடபட்ட முன்னோட்டம்
மற்றும் பாடல்கள்
அனைத்தும் இளைஞர்களை
வெகுவாக கவர்ந்தது
,இதனாலே தான் இந்த
படத்திற்கு இளைஞர்கள்
மத்தியில் மிக
பெரிய எதிர்பார்ப்பு ஏற்றபட
காரணமாக இருந்ததது
.தற்போது இத்தனை
வருடங்களின் எதிர்பார்பை
பூர்த்தி செய்யும்
நோக்கில் படம்
வெளியாகியுள்ளது .
எனை நோக்கி
பாயும் தோட்டா – படம்
ஆரம்பத்திலே மிக
பெரிய சண்டை காட்சியில்
தான் படம் துவங்குகிறது
,அப்போது தனுசை
நோக்கி ஒரு தோட்டா
பாய்கிறது அதில்
இருந்து படத்தின்
தலைப்பு போடப்படுகிறது .அதன் பின்
பிளாஸ் பேக் ஆரம்பிக்கிறது .தனுசுக்கு ஒரு
அண்ணன் மற்றும் ஒரு
தங்கை பொள்ளாச்சியில் வசிக்கும்
ஒர் குடும்பம் . அண்ணனான
சசிகுமார் காதல்
பிரச்சனையால் வீட்டை
விட்டு ஓடி விடுகிறார்
.கல்லூரியில் பயிலும்
தனுசுக்கும் அந்த
கல்லூரியில் சூட்டிங்கிற்கு வரும் மேகா
ஆகாஷ்க்கும் நெருக்கம்
உண்டாகுகிறது ,நெருக்கம்
காதலாகுகிறது ,இது
அனைத்திலும் பிரச்சனைகள்
துரத்தி கொண்டே
இருக்கின்றது ,பட
தயாரிப்பாளர் மேகா
ஆகாஷ் என் படத்தில்
கட்டாயம் நடிக்க
வேண்டும் என்று
இழுத்து செல்கிறார்
,நடித்து விட்டு
வருவாள் என்று
எதிர்பார்த்த தனுசுக்கு
ஏமாற்றம் .படம்
நடிக்க சென்ற மேகா
ஆகாஷ் நான்கு ஆண்டுகளாக
திரும்பி வரவில்லை.
திடீரென ஒரு
நாள் மேகா ஆகாஷ்
தனுசை தொடர்பு கொண்டு
உன் அண்ணனை நான்
மும்பையில் சந்தித்து
விட்டேன் ,நீ
மும்பை வா என்று
அழைக்கிறாள்,தன்
காதலியியையும் அண்ணனையும்
காண செல்கிறார் தனுஷ்
,தனது கல்லூரி தோழி
சுனைனா வீட்டில் மும்பையில்
தங்குகிறார் தனுஷ்
. என்ன நடந்தது என்பது
தான் மீதி கதை.
சண்டை போடும் காட்சிகள்
நடுவே வசனம் பேசி
கொண்டே சண்டை போடுவது
, மைண்ட் வாய்ஸ் வைத்து
பல பல காட்சிகள்
நகர்த்துவது என்று
நிறைய உத்திகளை ஸ்டைலாக
செய்திருக்கிறார் இயக்குனர்
கௌதம் .
இரண்டாம் பாதி
முழுவதும் முதல்
பாதியில் போட்ட
முடிச்சிகளை அவிழ்க்கிறார்கள் ,ஏன் மேகா
ஆகாஷ் திரும்ப வரவில்லை
ஏன் போலீஸாக இருக்கும்
சசிகுமார் கொல்லபடுகிறார் என்பது அனைத்திற்கும் விடை இரண்டாம்
பாதி தான். தனுஷ்
இந்த படம் ஆரம்பம்
முதலே வாய்ஸ் ஓவரில்
கதை சொல்லிக்கொண்டே இருக்கிறார்,ஒவ்வொரு காட்சியும்
தனுஷ் வாய்ஸ் ஓவருக்கு
பின்பே நகர்கிறது .கௌதம்
மேனன் எல்லா படங்களிலும்
இப்படி வாய்ஸ் ஓவரிலே
கதை செல்வதை பார்த்திருப்போம் .மேலும் கௌதம்
மேனன் எல்லா படங்களிலும்
ஒரு தேடல் இருக்கும்
கதாநாயகியை நாயகன்
தேடுவார் அல்லது
போலீஸ் கதாநாயகனை தேடும்
இப்படி இந்த படத்திலும்
ஒரு தேடல் இருக்கிறது.
அந்த தேடல் சுவாரஸ்யமாக
சொல்லப்பட்டது தான்
வெற்றி.
படத்தில் மிக
அற்புதமான விஷயம்
திரைக்ககதைக்கு ஏற்ப
பின்னனி இசை
அமைக்கபட்டது தான்.
படத்தின் மிக
பெரிய வெற்றிக்கு காரணம்
இசையமைப்பாளர் தர்புகா
சிவா ,மற்றும் பாடல்கள்.
கலை இயக்குனர் ராஜீவன்
செய்த எளிமையான எதார்த்தமான
ரி யலிஸ்டிக் ப்ராப்பர்டீஸ் அனைத்தும் பிரமாதம்.
தனுஷ் பேசும் மைண்ட்
வாய்ஸ் வசனங்கள் யாரோ
ஒருத்தர் நம்ம
சீட் பின்னாடி உக்கார்ந்து
சொல்லிகொண்டே இருப்பது
போல் இருக்கும் . ஏதோ
ஒரு வகையான மிஸ்டரி
நம்மை சூழ்ந்து கொண்டு
என்ன நடக்க போகுதோ
என்ற ஹைப்பர் டென்ஷன்ஸ்
கிரியேட் ஆவது
தான் இயக்குனரின் வெற்றி.
முத்த காட்சிகளில் காதலையும்
மத்த காட்சிகளில் பயத்தையும்
பக்காவாக கொடுத்திருக்கிறார்கள் தனுஷ் மற்றும்
மேகா ஆகாஷ்.
பச்சை பச்சையாக கொஞ்சம்
கொச்சையாக கெட்ட
வார்த்தைகள் பேசும்
வில்லன்ஸ் , கவுதம்
படத்தில் ஒன்னும்
புதிதல்ல . அதை
விரும்பியே செய்கிறார்
கௌதம். நடிகைகளின் ரியல்
வாழ்க்கை , அவள்
சந்திக்கும் பிரச்சனைகள்
என்று நாம் நிறைய
தமிழ் சினிமா பார்த்திருக்கிறோம் . இருந்தாலும் இது
கௌதம் ஸ்டைல் . சில்க்
ஸ்மிதா போன்ற நடிகைகள்
நிஜ வாழ்க்கையில் எத்தனையோ
பிரச்சனைகள் சந்தித்து
வந்தது , இன்ரைய கால
கட்டத்திலும் பல
நடிகைகளுக்கு சொல்ல
முடியாத பிரச்சனைகள்
எத்தனையோ மர்மமாக
தான் இருக்கிறது. அவை
அனைத்தையும் தனது
வித்யாசமான கற்பனையுடன்
சொல்லி இருக்கிறார் கௌதம்
காங்ஸ்டர் , மெர்டர்
, சேசிங் , கன் பைர்
, இவை நடுவே காதல்,
குடும்பம், சத்தம்
, கொஞ்சம் முத்தம்
என்று கமர்சியல் எலிமெண்ட்ஸ்
அனைத்தையும் ஒன்று
சேர்த்து ஒரு
நல்ல படம் கொடுத்திருப்பது திருப்தியே ஆகும்.
மைதிலியாக வரும்
சுனைனா அழகாக நடித்து
ஆறுதலாக காட்சிகளை
நகர்த்துகிறார். சசிகுமார்
பேசும் ஆங்கிலச் டைலாக்ஸ்
கொஞ்சம் காமெடியாக
தான் இருக்கிறது, இருந்தாலும்
அக்ஸ்சப்டட் . குண்டு
அடி பட்டு ஹீரோ
பிளாஷ் பாக் சொல்வதை
இனிமேல் கௌதம்
தயவு செய்து தவிர்க்க
வேண்டும். யாருக்காகவும் தன் பிலிம்
மேக்கிங் ஸ்டைலை
மாற்ற வேண்டாம் . ஆனால்
ஒரே மாதிரியான காட்சிகள்
கௌதம் படங்களில் இருக்கிறது
என்று யாரும் சொல்லாமல்
பார்த்து கொள்ள
வேண்டும் . என்னை
நோக்கி பாயும் தோட்டா
கொஞ்சம் லேட்டா
வந்தாலும் லேட்டஸ்ட்டாக
தான் இருகிறது . அடுத்த
அடுத்த படங்களில் தோட்டாவின்
வேகம் வேற வேற
லெவெல்ஸ்ல பாய
வேண்டும் என்று
ரசிகர்களின் எதிர்பார்ப்பை கௌதம் பூர்த்தி
செய்ய வேண்டும்