திருவண்ணாமலை: ‘திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், வரும், 24ல் நடக்கிறது’ என, கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டு, அதை நிவர்த்தி செய்யும் வகையில், வரும், 24 காலை, 10:00 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில், குறை தீர்க்கும் கூட்டம் நடக்க உள்ளது. இதில், வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகத் துறை, வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்பு துறை, கூட்டுறவு துறை, வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள், வங்கியாளர்கள், பிற சார்பு துறைகளின் அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.