கொரோனா நிவாரண பணிகளுக்காக விஜய் ரசிகர் மன்றத்தினர் 49 ஆயிரம் ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று தமிழ்நாட்டில் மிக வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் தற்போது 411 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரபலங்கள் பலரும் கொரோனாவுக்கு எதிராக போராடும் அரசுக்கு உதவ நிதி அளித்து வருகின்றனர். முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்சம் உதவி அளித்தார்.