History of Sachin Tendulkar – Happy 47th birthday

0
1385
History of sachin

History of Sachin Tendulkar

சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் (Sachin Ramesh Tendulkar) பிறப்பு ஏப்ரல் 24, 1973) என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரரும் இந்திய அணியின் முன்னாள் தலைவரும் ஆவார். துடுப்பாட்ட விளையாட்டில் எல்லா காலங்களில் விளையாடிய வீரர்களில் சச்சின் சிறந்த மற்றும் மிகவும் மதிக்கப்படும் வீரராக பரவலாக கருதப்படுகிறார்.இவர் பதினொரு வயதுமுதல் துடுப்பாட்டம் விளையாடி வருகிறார். தனது பதினாறாவது வயதில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 1989 இல் கராச்சியில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டத்தில் முதன்முறையாக விளையாடினார்.ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் முதன்முதலாக இருநூறு ஓட்டங்களை எடுத்தவர் இவர் ஆவார். பன்னாட்டுப் போட்டிகளில் நூறு முறை நூறு (துடுப்பாட்டம்) எடுத்தவரும் இவர் ஆவார். தேர்வுத் துடுப்பாட்டம் , ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் இவரே மேலும் பன்னாட்டுச் துடுப்பாட்டப் போட்டிகளில் 30,000 ஓட்டங்களைக் கடந்த ஒரே வீரரும் ஆவார்.

சச்சின் டெண்டுல்கருக்கு 2013ஆம் ஆண்டு இந்தியாவில் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இதன்மூலம் மிக இள வயதில் இந்த விருதைப் பெற்றவர் என்ற சாதனையையும், விளையாட்டு வீரர்களில் இந்த விருதினைப்பெறும் முதல் வீரர் எனும் சாதனைகளைப் படைத்தார். இவர் 2019ஆம் ஆண்டு ஐசிசியின் ஹால் ஆஃப் பேம் பட்டியலில் இடம்பெற்றார்.

 

இது வரை துடுப்பாட்டம் விளையாடிய அனைத்து மட்டையாளர்களிலும் தேர்வுப் போட்டிகளில் பிராட்மனுக்கு அடுத்த நிலையில் உள்ளவராகவும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளில் ரிச்சர்டுசுக்கு அடுத்த நிலையில் உள்ளவராகவும் 2002 இல் விசுடன் குழுமம் வெளியிட்ட தர வரிசை அறிவிக்கின்றது. இவர் ஆறு முறை துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடியுள்ளார். அதில் 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இவர் இடம்பிடித்திருந்தார்.தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் தொடர் நாயகன் விருது வென்றார். விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு தனது 150 ஆண்டு விழாவின் போது அனைத்து காலத்திற்குமான சிறந்த பதினொரு நபர்கள் கொண்ட தேர்வுத் துடுப்பாட்ட அணியை அறிவித்தது. அதில் இடம் பெற்ற ஒரே இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் சச்சின் மட்டுமே.

விளையாட்டுத் துறையில் இவரின் சாதனைகளைப் பாராட்டும் விதமாக 1994 ஆம் ஆண்டில் அருச்சுனா விருதும், 1997 ஆம் ஆண்டில் விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும் பெற்றுள்ளார். மேலும் 1999 இல் இந்தியாவின் குடிமை விருதுகளில் நான்காவதாக கருதப்படும் பத்மசிறீ விருதையும், 2008 இல் இரண்டாவதாக கருதப்படும் பத்ம விபூசண் விருதினைப் பெற்றார். மேலும் 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் நவம்பர் 16, 2013 இல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற சில மணித்தியாலத்தில் இந்தியப் பிரதமரின் அலுவலகத்திலிருந்து ஒரு அறிவிப்பு வந்தது. அதில் இந்தியாவின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் பாரத ரத்னா விருது சச்சினுக்கு வழங்கப்பட இருப்பதாக தகவல் இருந்தது.மிக இள வயதில் இந்த விருதைப் பெற்றவர் என்ற சாதனையையும், விளையாட்டு வீரர்களில் இந்த விருதினைப்பெறும் முதல் வீரர் எனும் சாதனைகளைப் படைத்தார். 2010 இல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை இவருக்கு அந்த ஆண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான சர் கர்ஃபீல்டு சோபர்ஸ் கோப்பை விருது வழங்கியது.

ஆரம்பகால வாழ்க்கை

டெண்டுல்கர் ஏப்ரல் 24,1973இல் தாதர், மும்பையில் பிறந்தார். இவரின் பெற்றோர்கள் மகாராட்டிர மற்றும் ராஜபூர் சரஸ்வத் பிராமண குடும்ப மரபைச் சேர்ந்தவர்கள் ஆவர்.இவரின் தந்தை ரமேஷ் டெண்டுல்கர் பரவலாக அறியப்படும் மராத்திய புதின எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். இவரின் தாய் ரஞ்னி காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தார்.[26] ரமேஷ் தனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளரான சச்சின் தேவ் பர்மன் என்பாரின் பெயரையே தனது மகனுக்கு பெயரிட்டார். சச்சினுக்கு நிதின், ஐத் எனும் இரு மூத்த சகோதரர்களும் சவிதா எனும் மூத்த சகோதரியும் உள்ளனர். இவர்கள் மூவரும் இவரின் தந்தையின் முதல் மனைவிக்குப் பிறந்தவர்கள் ஆவர்.

சச்சின் டெண்டுல்கர் மும்பை மாநகரத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். பல துடுப்பாட்ட வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் சேர்ந்தார். மும்பையின் பள்ளிகளுக்கிடையிலான போட்டி ஒன்றில், இப்பள்ளியின் சார்பாக விளையாடிய இவரும் வினோத் காம்ப்ளியும் இணைந்து 664 ஓட்டங்கள் குவித்துச் சாதனை புரிந்தனர். பின்னர் 1988/89இல் மும்பை சார்பாக விளையாடிய இவர் 100 ஓட்டங்களைக் குவித்தார். இது இவர் ஆடிய முதல் மாநிலங்களுக்கிடையிலான போட்டி என்பதும் அப்போது அவர் வயது 15 என்பதும் குறிப்பிடத்தக்கது.

சச்சின் 1989ஆம் ஆண்டு தம் 16ஆவது வயதில் முதன்முறையாக இந்தியாவின் சார்பாகத் தேர்வுப் போட்டிகளில் விளையாடினார். பாக்கித்தான் அணிக்கு எதிரான இந்தத் தேர்வுத் தொடரில் ஓர் அரைச்சதம் எடுத்தார். 1990இல் இங்கிலாந்து அணிக்கு எதிராகத் தனது முதல் நூறு ஓட்டங்கள் எடுத்தார். இவர், தேர்வுப் போட்டிகளில் 15,000 ஓட்டங்களுக்கு மேலும் ஒரு நாள் போட்டிகளில் 18,000 ஓட்டங்களுக்கு மேலும் எடுத்துள்ளார்.

சச்சினுக்கு அஞ்சலி என்ற மனைவியும் அர்ஜுன் என்ற மகனும் சாரா என்ற மகளும் உள்ளனர்.

தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர் : சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்
பிறப்பு : 24 ஏப்ரல் 1973
மும்பை, மகாராட்டிரம்
பட்டப்பெயர் : லிட்டில் மாஸ்டர்,[1] மாஸ்டர் பிளாஸ்டர்
உயரம் : 1.65 m (5 ft 5 in)
மட்டையாட்ட நடை : வலக்கை
பந்துவீச்சு நடை : வலக்கை இடச்சுழல், வலக்கை வலச்சுழல், வலக்கை இடத்திருப்பு
பங்கு : மட்டையாளர்

வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒநாப முத பஅ

ஆட்டங்கள் : 200 463 310 551
ஓட்டங்கள் : 15,921 18,426 25,396 21,999
மட்டையாட்ட சராசரி : 53.78 44.83 57.84 45.54
100கள்/50கள் : 51/68 49/96 81/116 60/114
அதியுயர் ஓட்டம் : 248* 200* 248* 200*
வீசிய பந்துகள் : 4,240 8,054 7,605 10,230
வீழ்த்தல்கள் : 46 154 71 201
பந்துவீச்சு சராசரி : 54.17 44.48 61.74 42.17
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள் : 0 2 0 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள் : 0 0 0 0
சிறந்த பந்துவீச்சு : 3/10 5/32 3/10 5/32
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள் : 115/– 140/– 186/– 175/–

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here