இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டங்கள் உருவாக்கப்பட்டு அவை 1950 ஆம் ஆண்டு ஜனவாி மாதம் 26 ஆம் நாள் அமல்படுத்தப்பட்டன. அந்த சிறப்பு மிகுந்த நாளை கௌரவிக்கும் பொருட்டு 1950 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவாி மாதம் 26 ஆம் நாள் அன்று நாம் இந்திய குடியரசு தின விழாவை கொண்டாடுகிறோம்.
வரலாறு ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா நாடு, பிாிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்திய விடுதலை இயக்கத்தின் அயராத போராட்டத்தின் விளைவாக 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15 ஆம் நாள் பிாிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெற்றது. விடுதலை பெற்ற பின்பும் சுதந்திர இந்தியாவிற்கு என்று நிலையான, தனியான மற்றும் சுதந்திரமான அரசியல் அமைப்பு சட்டங்கள் உருவாக்கப்படவில்லை. மாறாக 1935 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் அமல்படுத்தப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டங்களில் சில மாற்றங்களைச் செய்து அவற்றை நடைமுறையில் வைத்திருந்தனா்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் இந்திய விடுதலைக்குப் பின் இரண்டு வாரங்கள் கழித்து அதாவது 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29 ஆம் நாள் முனைவா் அறிஞா் அம்பேத்கா் அவா்களின் தலைமையில் சுதந்திர இந்தியாவிற்கான நிலையான அரசியல் அமைப்புச் சட்டங்களை உருவாக்கும் வரைவுக் குழு ஏற்படுத்தப்பட்டது. வரைவுக் குழு உருவாக்கிய சுதந்திர இந்தியாவிற்கான அரசியல் அமைப்புச் சட்டங்கள் தீர ஆராயப்பட்டு, இறுதி செய்யப்பட்டு 1950 ஆம் ஆண்டு ஜனவாி 26 அன்று அமல்படுத்தப்பட்டது. அன்றைய தினம் இந்தியா ஒரு விடுதலை அடைந்த இறையாண்மை கொண்ட குடியரசு என்று அறிவிக்கப்பட்டது. ஜனவாி 26 ஆம் நாளுக்கு என்று ஒரு தனிச் சிறப்பு உண்டு. அதாவது 1929 ஆம் ஆண்டு ஜனவாி 26 அன்று இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பு ஆங்கிலேயா்களின் ஆட்சிக்கு எதிராக இந்திய விடுதலையை (பூா்ண சுவராஜ்) முதன் முறையாக அறிவித்தது. இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள் 1950ல் அமல்படுத்தப்பட்டாலும், அவை 1949 ஆம் ஆண்டு நவம்பா் மாதம் 26 ஆம் நாள் முதல் இந்திய அரசியலமைப்பு சபையால் அங்கீகாிக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வந்தது. வரைவுக் குழு தயாாித்த அரசியலமைப்புச் சட்டங்கள் முதலில் 1947 ஆம் ஆண்டு நவம்பா் 4 ஆம் நாள் அன்று இந்திய அரசியலமைப்பு சபையிடம் சமா்ப்பிக்கப்பட்டன. அவை 308 சபை உறுப்பினா்களிடம் பிாித்துக் கொடுக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளில் ஏறக்குறைய 166 அமா்வுகளில் கலந்து ஆலோசிக்கப்பட்டு, அவற்றில் மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் செய்யப்பட்டன.
ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியாலான சட்டப்புத்தகம் இறுதியாக ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் கைகளால் எழுதப்பட்ட இந்திய அரசியல் அமைப்பு சட்டங்களுக்கு 1950 ஆம் ஆண்டு ஜனவாி 24 அன்று இந்திய அரசியலமைப்பு சபை உறுப்பினா்கள் அனைவரும் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டனா். இரண்டு நாட்கள் கழித்து அதாவது 1950 ஆம் ஆண்டு ஜனவாி 26 அன்று புதிய இந்திய அரசியல் அமைப்புச் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.
முதல் குடியரசுத் தலைவர் அன்று முனைவா் ராஜேந்திர பிரசாத் அவா்கள் இந்திய ஒன்றியத்தின் முதல் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டாா். புதிய இந்திய அரசியலமைப்பு சட்டங்களின்படி இந்திய அரசியலமைப்பு சபையானது இந்திய நாடாளுமன்றமாக மாறியது. ஜனவாி 26 இந்தியா்கள் அனைவருக்கும் மிகவும் ஒரு முக்கியமான நாளாகும். அந்த நாளில் தான் 1935 ஆம் ஆண்டு ஆங்கிலேயா்களால் உருவாக்கப்பட்ட அடிமை இந்திய சட்டங்கள் களையப்பட்டு இந்தியா்களால் உருவாக்கப்பட்ட விடுதலை பெற்ற புதிய இந்திய அரசியலமைப்பு சட்டங்கள் நடைமுறைக்கு வந்தன.
இந்திய தேசியக்கொடியின் வரலாறு
இந்தியக்கொடியின் தற்போதைய வடிவமைப்பு பல்வேறு கட்டங்களில் பல வடிவங்களாக இருந்து, ஒவ்வொரு முறையும் மெருகூட்டப்பட்டது. இந்தியாவின் முதல் தேசியக்கொடியை சகோதரி நிவேதிதா 1904 ஆம் ஆண்டு முதல் முதலில் வடிவமைத்தார். அந்தக்கொடி, சிவப்பு நிறத்தில் மஞ்சள் கோடுகளுடன், கொடியின் நடுப்பகுதியில் வஜ்ரா மற்றும் பக்கங்களில் ‘வந்தே மாதரம்’ என்ற வார்த்தைகளும் இருக்கும் படி வடிவமைக்கப்பட்டது.
1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று, கொல்கத்தாவில் இருக்கும் பார்சி பாகன் சதுக்கத்தில், முதன்முதலாக மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது. அந்த மூவர்ணக்கொடியில் நீலம், மஞ்சள் மற்றும் சிவப்பு என்ற மூன்று வண்ணங்கள், மூன்று பட்டைகளாக இருந்தன. இதைத் தவிர்த்து, எட்டு நட்சத்திரங்கள், இந்தியாவின் எட்டு மாகாணங்களைக் குறிக்கும் படி அமைந்திருந்தது. மேலும், மஞ்சள் நிறப்பட்டையில் ‘வந்தே மாதரம்’ என்று வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. மேலும், சிவப்பு நிறப்பட்டையில் சூரியன், பிறை நிலவு மற்றும் நட்சத்திரம் இருந்தன.
அடுத்ததாக, 1921 ஆம் ஆண்டு பிங்கலி வெங்கையா என்ற சுதந்திரப் போராட்ட வீரர் ஸ்வராஜ் கொடியை வடிவமைத்தார். இந்தக் கோடியில் முதலில் இருக்கும் மேற்புறப்பட்டை வெள்ளை நிறத்திலும், நடுப்பகுதி பச்சை நிறத்திலும், கீழ் பட்டை சிவப்பு நிறத்திலும் இருந்தது. கொடியின் நடுப்பகுதியில் நூற்பு சக்கரம் வடிவமைக்கப்பட்டு, அது மூன்று வண்ணங்களிலும் பரவியது மற்றும். இந்தக் கொடி, ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்து இந்தியாவின் சுதந்திரத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது.