திருவண்ணாமலையில் தூய்மைப் பணியில் ஈடுபடும் தூய்மை அருணைத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு மருந்து தெளிப்பான்கள், உபகரணங்களை திட்டத்தின் அமைப்பாளரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

0
3256

திருவண்ணாமலையில் தூய்மைப் பணியில் ஈடுபடும் தூய்மை அருணைத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு மருந்து தெளிப்பான்கள், உபகரணங்களை திட்டத்தின் அமைப்பாளரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

திருவண்ணாமலை நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை தூய்மைப்படுத்துதல், சாலையோரங்களில் மரங்கள் நடுதல், இலவச மருத்துவ முகாம்கள் நடத்துதல் உள்ளிட்ட நோக்கில் தூய்மை அருணை என்ற திட்டம் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை நகராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி கோயில் மாட வீதிகளில் தினமும் தூய்மைப் பணி நடைபெறுகிறது.

இந்த நிலையில், தூய்மைப் பணியில் ஈடுபடும் ஒருங்கிணைப்பாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு மருந்து தெளிப்பான் (ஸ்பிரேயர் கருவி), தூய்மைப் பணிக்கான உபகரணங்கள் வழங்கும் விழாவும், தூய்மைப் பணியும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கு முன்னாள் நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன் தலைமை வகித்தார். தூய்மை அருணை திட்டத்தின் அமைப்பாளரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு ஒவ்வொரு வார்டுக்கும் தேவையான மருந்து தெளிப்பான் (ஸ்பிரேயர்), கையுறைகள், முகத்துக்கு அணியும் மாஸ்க்குகள், கொசு ஒழிப்பு மருந்து, பினாயில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை அந்தந்த பகுதி ஒருங்கிணைப்பாளர்களிடம் வழங்கினார்.

தூய்மைப் பணி: தொடர்ந்து, பே கோபுரத் தெரு, சோமவார குளத் தெரு, வடக்குத் தெரு, நாவக்கரை, வேட்டவலம் சாலை, முகல்புரா தெரு பகுதிகளில் தூய்மை அருணை திட்ட தூய்மைக் காவலர்களுடன் இணைந்து எ.வ.வேலு தூய்மைப் பணியை மேற்கொண்டார்.

நிகழ்ச்சியில், தூய்மை அருணை திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ப.கார்த்திவேல்மாறன், எம்எல்ஏ மு.பெ.கிரி, சி.என்.அண்ணாதுரை, மருத்துவர் எ.வ.வே.கம்பன், இர.செல்வராஜ், குட்டி க.புகழேந்தி, அ.அருள்குமரன், ஏ.ஏ.ஆறுமுகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here