சாத்தனூர் அணைக்கு விநாடிக்கு 7,721 கன அடி நீர் வரத்து

0
5492

திருவண்ணாமலை: சாத்தனூர் அணைக்கு விநாடிக்கு, 7,721 மில்லியன் கன அடி நீர் வந்து கொண்டு உள்ள நிலையில், 3,369 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், கே.ஆர்.பி., அணையின் ஷட்டர் உடைந்து சேதமானதால், அதிலிருந்து வெளியேறும் நீர் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, சாத்தனூர் அணை வந்தடைந்தது. 119 அடி உயரம் கொண்ட அணையில், தற்போது, 118.20 அடி நீர் மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு, 7,721 கன அடி நீர் வந்து கொண்டுள்ள நிலையில், 3,369 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் முழு கொள்ளவை எட்டியவுடன், வரும் நீரை, அப்படியே திறந்துவிடும் நிலையில், நேற்று மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பரவலாக பலத்த மழை பெய்தது. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here