இருட்டு அறையில் முரட்டுக் குத்து சினிமா விமர்சனம்

0
4284
நடிகர்கள் ஓவியா,கருணாகரன்,மொட்டை ராஜேந்திரன்,கௌதம் கார்த்திக்,ரவி மரியா
இயக்கம் சன்தோஷ் பி ஜெயகுமார்

இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் ஒரு பொிய பங்களாவிற்குள் மாட்டிக்கொள்கின்றனர். அந்த பங்களாவில் ஒரு கன்னிப் பேய் இருக்கிறது. அந்த பேய் அந்த ஆண்களை தனது ஆசைக்கு இணங்க, அவர்களை துரத்துகிறது. அந்த இரண்டு ஆண்களும் எப்படி தப்பிக்கிறார்கள் மேலும் இந்த 4 பேருக்கும், அந்த பேய்க்கும் மத்தியில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

இருட்டு அறையில் முரட்டு குத்து இந்த தலைப்பே, இந்த திரைப்படதுக்கு அதிக எதிர்ப்பும், அதிக எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படத்தை கண்டிப்பாக 18 வயதுக்கு மேலே உள்ளவர்கள்தான் பார்க்க வேண்டும் என்று படத்தின் இயக்குநர் மற்றும் படக்குழுவினர் கூறியிருந்தனர். மேலும் இந்த படத்தின் டிரைலர் வெளியானதும் அதை ஒரு மில்லியனக்கும் அதிகமானோர் பாத்துள்ளனர்.

இந்த படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயகுமார் முதல் படம் திரிஷா இல்லேனா நயன்தாரா மற்றும் அவரது இரண்டாவது படம் ஹர ஹர மாகாதேவிகி. அவரின் முன்றாவது படமாக இருட்டு அறையில் முட்டு குத்து வெளியாகியுள்ளது.

அவர் திரைப்படங்களில் இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்களுக்கு பஞ்சம் இருக்காது. தமிழ் திரையுலகில் அடெல்ட் மூவீஸ் அதாவது உடலுறவு மற்றும் காமம் சார்ந்த படங்கள் வெளிவருவது குறைவு. இந்த வகையான படங்கள் வெளிநாடுகளில் மட்டுமே வெளியாகிறது.

இந்த வகையில் அடெல்ட் ஹாரர் (adult horror movies) படம் ஒன்றை இயக்குநர் எடுக்க முற்சித்துள்ளார். படம் முழுக்க பேய் மற்றும் இளவட்டங்கள் ரசிக்கும் வகையில் இரட்டை அர்த்தங்களும் அதிகம்.

படத்தின் கதாநாயகன் கெளதம் கார்த்திக். அவர் மிகவும் இந்த கதாபாத்திரத்தில் பொருந்திபோய்யுள்ளார். படத்தில் கன்னியான பேய்அவரை அடைய நினைகும்போது, அவரின் முக பாவனைகளை பார்த்து அனைவருக்கும் கண்டிப்பாக சிரிப்பு வந்துவிடும்.

படத்தின் கதாநாயகனுக்கு நண்பராக நடிப்பவர் ஷாரா. அவர் டெம்பில் மங்கீஸ்(temple monkey) என்ற யூடியூப் சேனல் மூலம் அனைவருக்கும் ஏற்கனவே அறிமுகமானவர். படத்தில் அவர் பஞ்சம் இல்லாமல் இரட்டை மொழி வசனங்களை அல்லி வீசுகிறார். மேலும் அவரும் கெளதம் காத்தியும் சேர்ந்து பேயிடம் மாட்டிக்கொளும் காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

கன்னி பேயாக நடித்திருக்கும் சந்திரிகா ரவி தனது முதல் படத்திலேயே மிக வித்தியசமான கதையை எடுத்து நடித்திருப்தற்காகவே அவரை பாராட்ட வேண்டும். பேய் அனைவரையும் பழிவாங்கும் என்றுதான் கேட்டு இருக்கிறோம். ஆனால் படத்தில் பேயாக நடிக்கும் சந்திரிகா ரவியின் எண்ணமே வேறு. எப்படியாவது அந்த ஆண்களில் ஒருவரை அடைய வேண்டும் என்பதுதான் பேயின் எண்ணம். இந்த கதாபாத்திரத்தில் மிக நேர்த்தியான நடிப்பை வெளிபடுத்துயுள்ளார்.

மேலும் படத்தில் காவ்யா என்ற கதாபாதிரத்தில் யாஷிக்கா ஆனந்த நடித்துள்ளார். ஷாராவின் காதலியாக நடித்துள்ளார். புதுமுக நடிகையாக இருந்தாலும் கதாபத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்துள்ளார்.

வீரா மற்றும் வாசு ( கெளதம் கார்த்திக் , ஷா ரா) இருவரில் யாராவது ஒருவர் அந்த பேயுடன் உடலுறவு வைத்துக்கொண்டால் மட்டுமே அந்த பங்களாவை விட்டு அவர்களால் வெளியே செல்ல முடியும் என்ற சூழ்நிலை ஏற்படுகிறது.

அவர்கள் தங்களை காப்பாற்ற சாமியாரான மொட்டை ராஜேந்திரன் மற்றும் பாலசரவணனிடம் உதவி கேட்கின்றனர். அதன்பிறகு படத்தில் ஓர் இன சேர்க்கையாளர்களாக கிரிஷ் கல்யான் மற்றும் ஜான் விஜய் நடித்துள்ளனர். அப்போது நடைபெறும் காமெடியை இளைஞர்கள் வெகுவாக ரசிக்கின்றனர்.

இறுதியில் பேயின் ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதுதான் கதை.

கண்டிப்பாக படத்திற்கு குடும்பத்தை அழைத்து செல்லாமல் போவது நல்லது. மேலும் நண்பர்களாக சென்றால் அதிகமாக ரசிக்கமுடியும். எந்த முன்முடிவுகளும் இல்லாமல் செல்வது மிக முக்கியம். வேறு லெவல் அனுபவமாக இருக்கும் என்பது உறுதி.

இரட்டை அர்த்த வசனங்களும் காட்சிகளும் சிறுவர்களையும், குழந்தைகளையும் எளிதில் அடையும் வகையில் இருக்கும் சூழலில் இம்மாதிரியான படங்கள் நம் சமூகத்திற்கு சங்கடங்களையே விளைவிக்கும். தியேட்டர்களுக்கு 18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றாலும், இன்றைக்கு யூ-ட்யூப் உள்ளிட்ட சமூக தளங்களில் அத்தனையையும் யாரும் எளிதில் பார்த்துவிட முடியும். அந்த வகையில், தமிழ் படங்களில் இலைமறைகாயாக இருந்து வந்த இரட்டை அர்த்த வசனங்கள் படம் முழுக்கவே நிறைந்திருப்பதை எச்சரிக்கையாகவே அணுக வேண்டியிருக்கிறது. இம்மாதிரியான படங்கள் சிறுவர்களைச் சேராமல் தடுக்கவேண்டியது படக்குழுவினரின் பொறுப்பும் கூட

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here