இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் சில ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். கடந்த சில நாட்களாக இவர்களது திருமணம் குறித்து செய்திகள் வெளியான நிலையில், இதை அனுஷ்கா சர்மா தரப்பு மறுத்து வந்தது. இந்நிலையில், கோஹ்லி – அனுஷ்கா சர்மா இருவரும் இரண்டு நாட்களுக்கு முன்பு இத்தாலியில் உள்ள மிலன் நகருக்கு சென்றனர். அங்கு இரு தரப்பினருக்கும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இருவரும் இன்று திருமணம் செய்துகொண்டுள்ளதாக ட்விட்டரில் செய்தி நிறுவனமான ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டது.