இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது

0
1312

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துவரும் நிலையில், தற்போது வரை, 1,1,139 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 4,970 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 134 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில், கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3,163 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 36,823 பேர் குணமாகியுள்ளனர். கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதுவரை அம்மாநிலத்தில் 25,922 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக  கொரோனா பாதிப்பு அதிகம் இருந்தததால் இந்திய அளவில் மீண்டும் 2வது இடத்திற்கு வந்துள்ளது. 2வது இடத்தில் உள்ள தமிழகத்தில் 11,760 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை தொடர்ந்து அதிக பாதிப்புகளுடன் குஜரத் மூன்றாம் இடத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here