அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை.திருக்கார்த்திகை தீபத்திருவிழா
20.11.2017 துர்கை வழிபாட்டுடன் துவங்கி 23.11.2017 காலை கொடியேற்றம் 2.12.2017 அதிகாலை பரணி தீபம் மாலை 6.00 மணி மகாதீபம் மற்றும் தெப்பல் உற்சவம் நடைபெறுவதையொட்டி பந்தக்கால் விழா இன்று 1.10.2017 காலை நடைபெற்றது. சம்பந்த விநாயகர் சந்நிதியில் பந்தகாலுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை. பின்னா் திருக்கோயில் பிச்சகா் திரு.ரகு அவர்கள், பந்தக்கால்சுமந்து வர, பஞ்சரதங்களுக்கும் சிறப்பு தீபாரதனை, பின்னர் இராஜகோபுரம் முன் பந்தக்கால் நடப்பட்டது. இணை ஆணையர் இரா.ஜெகன்னாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு.எஸ்.இராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.சந்தசாமி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.