விஜய் ஆண்டனியின் காளி திரை விமர்சனம்.!

0
3631

விஜய் ஆண்டனி நடிப்பில் இன்று திரைக்கு வந்துள்ள திரைப்படம் தான் காளி, இந்த திரைப்படத்தின் டைட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த காளி திரைப்படத்தின் டைட்டில் தான் படத்தை கிருத்திகா உதையநிதி இயக்கத்தில் வெளியாகியுள்ளது, படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார், காமெடி நடிகராக யோகிபாபு நடித்துள்ளார்.

காளி படத்தை பற்றி பார்ப்போம்:

படத்தில் விஜய் ஆண்டனி கதைக்கு ஏற்றவாறு பக்காவாக நடித்துள்ளார், விஜய் ஆண்டனி படம் என்றாலே அம்மா செண்டிமெட் இருக்கும், அல்லது சைக்கோ கதாபாத்திராமாக இருக்கும் என அனைவருக்கும் தெரிந்தது தான் ஆனால் இந்த படத்தில் கொஞ்சம் வித்தியாசமாக அப்பா சென்டிமென்ட் வைத்துள்ளார் விஜய் ஆண்டனி, விஜய் ஆண்டனிக்கு உறங்கும் பொழுது அடிக்கடி கனவு வருகிறது, அந்த கனவில் ஒரு பாம்பு மற்றும் ஒரு மாடு தெரிகிறது.

இவர் அமெரிக்காவில் ஒரு டாக்டராக இருக்கிறார் இவர் ஒரு வளர்ப்பு மகன் என தெரிய வருகிறது பின்பு தனது வளர்ப்பு பெற்றோரின் உதவியுடன் தனது தந்தை தாயை தேடி வருகிறார் தனது தாய் இறந்து விட்டார் என தெரியவருகிறது விஜய் ஆண்டனிக்கு, ஆனால் தனது தந்தை உயிருடன் இருக்கிறார் என தெரியவருகிறது தனது தந்தை யார் எங்கு இருக்கிறார் என்று தேடி செல்கிறார். தனது தந்தை எங்கு இருக்கிறார் தனது அம்மாவுக்கு என்ன ஆனது என்பதை கண்டுபிடிப்பதே மீதி கதை.

படத்தில் தனக்கு என்ன வருமோ அதை தனது இயல்பான நடிப்பினால் நடித்து அசத்தியுள்ளார் விஜய் ஆண்டனி, ஆனால் இவர் நடித்த மற்ற படங்களை போலவும் இந்த படத்திலும் முகத்தில் எதோ ஓன்று மிஸ் ஆக்குவதை பார்க்க முடிகிறது, மேலும் மற்ற படத்தை விட இந்த படத்தில் கொஞ்சம் அப்பா செண்டிமெண்ட் வைத்துள்ளார், என்ன தான் விஜய் ஆண்டனி நடித்தாலும் முதல் பாதியில் யோகி பாபு தான் கண்ணுக்கு தெரிகிறார் அந்த அளவிற்கு முதல் பாதி படத்தை தாங்கி பிடித்துள்ளார் ஒன் மென் ஆர்மியாக தனது கவுண்டரின் மூலம்.

வழக்கம் போல விஜய் ஆண்டனி அப்பாவை கண்டுபிடிக்க யோகி பாபு பல ஐடியாக்கள் கொடுக்கிறார், ஊர் தலைவர் வீட்டில் திருடபோவது, சரக்கு வாங்கி கொடுத்து கதையை கேட்டு கலாய்ப்பது என தனி ஆளாக படத்தில் மாஸ் காட்டுயுள்ளார். காளி படத்தில் 3 கதை இருக்கிறது, 3 பேரிடமும் தனது அப்பா பற்றி விசாரிக்கிறார் விஜய் ஆண்டனி முதல் இரண்டு கதையில் ஒரு சுவாரசியம் இல்லை மூன்றாவது கதை தொடங்கும் பொழுது இன்னுரு கதையா என நினைக்க தோன்றுகிறது ஆனால் மூன்று கதையில்ம் எமோஷன் மட்டும் இருக்கிறது, பாடலில் விஜய் ஆண்டனி அசத்திவிட்டார். மூன்றாவது கதை அனைவரயும் கவரும் படியாக அமைகிறது படத்தில்.

படத்தில் யோகிபாபு முதல் பாதியில் அசத்தியுள்ளார், விஜய் ஆண்டனி இசை அனைவரையும் கவர்ந்துவிட்டது. படத்தில் ஒட்டாத காதல் காட்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here