முகத்தில் ஆங்காக்கே தென்படும் பருக்கள் மறைய பூண்டை நன்கு மசித்துக்கொள்ளுங்கள். பின் அதில் தேன் மற்றும் கொஞ்சம் தயிர் சேர்த்து பருக்கள் உள்ள இடங்களில் அப்ளை செய்யுங்கள்.
பூண்டு பயன்படுத்தி தலை மற்றும் சரும பராமரிப்பிற்கு என்னென்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
முகப்பரு : முகத்தில் ஆங்காக்கே தென்படும் பருக்கள் மறைய பூண்டை நன்கு மசித்துக்கொள்ளுங்கள். பின் அதில் தேன் மற்றும் கொஞ்சம் தயிர் சேர்த்து பருக்கள் உள்ள இடங்களில் அப்ளை செய்யுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இப்படி செய்து வர முகப்பருக்களின் அளவு குறைந்து அப்படியே மறைவதைக் காணலாம்.
பொடுகு தொல்லை நீங்க : பூண்டை இடித்துக்கொள்ளுங்கள். பின் ஆலிவ் எண்ணெய்யை கடாயில் ஊற்றி காய்ச்சி அதில் இடித்த பூண்டுகளையும் சேர்த்து கொதிக்க வையுங்கள். அந்த எண்ணெய்யை வடிகட்டி தலையின் வேர்களில் தடவி மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் கழித்து தலையை அலசுங்கள்.இப்படி தலைக்குக் குளிக்கும்போதெல்லாம் செய்து வாருங்கள் பலன் கிடைக்கும்.
நகம் பராமரிப்பு : நகங்கள் மஞ்சளாகவோ, வெண்மையில்லாமலோ இருந்தால் உடனே பூண்டை நசுக்கி அதன் சாறை கைகளில் தேய்த்து 3 நிமிடங்கள் கழித்து துடைத்துவிடுங்கள். இவ்வாறு செய்து வர நகங்கள் வெண்மையாக மாறும்..