உணவு ஒவ்வொரு உயிரினத்திற்கும் மிகவும் முதன்மையான ஒன்றாக கருதப்படுகிறது. உலகில் வாழும் எல்லா வகையான ஜீவ ராசிகளுக்கும் உணவே அடிப்படை. உணவின்றி இந்த பூமியில் எந்த உயிரினமும் இயங்காது. இப்படி பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட இவற்றை நாம் சரியான நேரத்திலும், ஆரோக்கியமான முறையிலும் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.
இல்லையேல் எண்ணற்ற உடல் கோளாறுகளை இது ஏற்படுத்த கூடும். அந்த வகையில் காலை உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒருவர் காலை உணவை சாப்பிடாமல் தவிர்த்தால் எத்தகைய பிரச்சினைகளை உடலில் ஏற்படுத்தும் என்பதை பற்றி இந்த பதிவில் முழுமையாக தெரிந்து கொள்வோம்
ஃபேஷன் டயட்..! இப்போதெல்லாம் ஒரு புதுயுக ஃபேஷன் டயட் பல தரப்பு மக்களாலும் பின்பற்றப்பட்டு வருகிறது. ஃபேஷன் என்ற பெயரில் உணவை தவிர்ப்பது பக்க விளைவுகளை உடலுக்கு ஏற்படுத்தும். டயட் இருப்பது நல்லதுதான். ஆனால், டயட் என்பது ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதே தவிர, உணவை தவிர்ப்பது இல்லை. இது முழு உடலையும் சீர்குலைய செய்து விடும்.
ஆராய்ச்சியின் மோசமான முடிவு..! காலை உணவை பற்றிய ஆராய்ச்சிகள் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்,காலை உணவை தவிர்க்க கூடிய மக்களை கொண்டு செய்த ஆய்வில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அது என்னவென்றால், காலை உணவை சாப்பிடாதவர்களுக்கு எண்ணற்ற பிரச்சினைகள் உடலில் ஏற்பட்டுள்ளதாக கண்டறிந்தனர்.
சர்க்கரை நோயும் உணவும்..! நீங்கள் காலை உணவை தவிர்த்தால் அது உங்கள் சர்க்கரையின் அளவை அதிகரித்து, நீரிழிவு நோயை உண்டாகுமாம். தினமும் காலையில் சாப்பிடாமல் இருந்தால் அவை இன்சுலின் உற்பத்தியை குறைத்து விடும். பிறகு மதிய உணவை நீங்கள் எடுத்து கொள்ளும்போது அவற்றின் குளுக்கோஸ் அளவை இவற்றால் ஈடுகட்ட முடியாமல் Insulin resistance ஏற்படுத்துமாம். இறுதியாக இவை சர்க்காரை நோயிற்கு வழி வகுக்கும்.
மூளையை சோர்வுற செய்யுமா..? மூளைக்கு சரியான அளவில், உடலில் இருந்து ஆற்றல் கிடைக்க வில்லையென்றால் அது பல்வேறு உடற்கூறுகளை பாதிக்கும். காலை உணவை தவிர்ப்பதால் உடலில் குளுகோஸின் அளவு குறைந்து மூளை சோர்வு பெறுகிறது. மேலும் இது மறதி போன்ற பல வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும். அத்துடன் வேளையில் ஆர்வத்தை குறைத்து மழுங்க செய்து விடும்.