ஒவ்வொரு நாட்டிற்கென்று ஒரு சிறப்பான உணவு வகை உண்டு. சில உணவுகள் அந்த நாட்டில் மட்டுமே சிறப்பு பெற்றிருக்கும். வேறு சில உணவுகள் உலக நாடுகள் அனைத்துலையும் மிகவும் பிரசித்தி பெற்றிருக்கும். எப்படி இந்தியாவில் பல மசாலா சார்ந்த உணவுகள், பலகாரங்கள் மிகவும் பிரபலமாக உள்ளதோ அதே போன்று உலக நாடுகளிலும் பல வகையான உணவுகள் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் உள்ளது.
சில நாட்டு உணவுகள் நாம் நினைப்பது போன்று அந்த நாட்டில் இருந்து பூர்வீகமாக வந்ததாக இருக்காது. இந்திய உணவுகளில் வடை, சமோசா, புட்டு, முறுக்கு, அல்வா, காரம்..இப்படி பல உணவுகள் வலம் வருகிறது. ஆனால் இவற்றில் பல இந்தியாவில் இருந்து வந்ததில்லை. வேறு சில நாடுகளில் இருந்து இவை வந்தது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் நமது இந்திய நாட்டு உணவு என நாம் நம்பி கொண்டிருந்த பிரியாணியும் அடங்கும். பிரியாணி உண்மையில் எந்த நாட்டு உணவு? இதன் பூர்வீகம் என்ன? எப்படி இந்திய நாட்டுக்குள் வந்தது? மேலும் மற்ற உணவுகளின் பூர்வீகம் என்ன? இது போன்ற பல தகவல்களை இந்த பதிவில் அறியலாம்.
பிரஞ்சு ப்ரைஸ் உருளைக்கிழங்கை நீள் வாக்கில் அரிந்து அதை பொரித்து எடுத்தால் அதற்கு பெயர் பிரஞ்சு ப்ரைஸ். இதன் பெயரிலே இந்த உணவின் பூர்வீகம் உள்ளது. ஆமாங்க, இந்த உணவானது பிரஞ்சு நாட்டில் தான் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.