திருவண்ணாமலை திருக்கோவிலூர் ரோடு, சாரோனில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் த.வேணுகோபால் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.சிவானந்தம், கழக தணிக்கைக்குழு உறுப்பினர் கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி தெற்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான எ.வ.வேலு பேசினார்.
கூட்டத்தில், தமிழக அரசு பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறும் வரை தொடர் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்த செயல் தலைவர் ஸ்டாலின் ஆணையை ஏற்று திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, கே.வி.சேகரன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், டாக்டர் எ.வ.வே.கம்பன், மாவட்ட அமைப்பாளர்கள் சி.என்.அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.