திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், பங்குனி மாத பவுர்ணமி வரும், 30 இரவு, 7:31 மணி முதல், 31 மாலை, 6:30 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில், கிரிவலம் வர உகந்த நேரம். மேலும், பவுர்ணமி மற்றும் விடுமுறை நாட்கள் என தொடர்ந்து நான்கு நாட்கள் வருவதால், வரும், 29, 30, 31, ஏப்.,1, வரை பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். எனவே, நான்கு நாட்களும், அமர்வு தரிசனத்திற்கு அனுமதி இல்லை என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.