நியூ.சிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டி… அணியில் இருந்து டோணி அதிரடி நீக்கம்?

0
5096
dhoni

இந்தியா vs நியூசிலாந்து, என்ன நடக்கப்போகுது?- வீடியோ திருவனந்தபுரம்: இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது வருகிறது. டெல்லியில் நடந்த முதல் டி-20 போட்டி இந்திய அணியும் , ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றது. இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டி-20 போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று மாலை நடக்க இருக்கிறது. இந்த நிலையில் இன்று நடக்கும் போட்டியில் டோணி விளையாடுவது சந்தேகம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. டோணிக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் கீப்பிங் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மூன்றாவது டி-20 இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. மூன்றாவது போட்டியில் இந்தியா வெல்லும் பட்சத்தில் தொடரை வென்றுவிடும் என்பதால் இது மிகவும் முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டி-20 போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று மாலை நடக்க இருக்கிறது. அங்கு மழை பெய்வதால் போட்டி நடப்பது சந்தேகமாக இருக்கிறது.

டோணியின் கதி என்ன தற்போது இந்த முன்றாவது டி-20 போட்டியில் டோணி விளையாடுவது சந்தேகம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த போட்டியில் டோணி 37 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். ஆனாலும் அவர் கடைசியாக பிடித்த 32 பந்துகளில் வெறும் 23 ரன்கள் மட்டுமே எடுத்தார். மற்ற அனைத்து ரன்களும் முதல் 5 பந்துகளில் எடுத்ததுதான். இந்த நிலையில் இவர் டி-20 போட்டிகளில் விளையாட ஏற்றவர் இல்லை என்ற கருத்து உருவாகி இருக்கிறது.

முதலில் இருந்து ஆட வேண்டும் முதலில் டோணியின் ஆட்டம் குறித்து விமர்சனம் வைக்க தொடங்கியவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் தான். அவர்தான் முதன்முதலாக “டோணி 50 ஓவர் போட்டிகளில் சரியாகவே விளையாடுகிறார். ஆனால் டி-20 போட்டிகளில் அவர் ஆட்டம் சரியாக இல்லை. எனவே டோணி டி-20யில் புதிய வீரர்களுக்கு இடம் தர வேண்டும்” என்று கூறினார். மேலும் சேவாக் “டோணி சரியாக ஆடுகிறார். ஆனால் அவர் தொடக்கத்தில் இருந்து அடித்து ஆட தொடங்க வேண்டும்” என்று கூறினார்.

விளையாடுவாரா தற்போது இதன்காரணமாக இன்று நடக்கும் மூன்றாவது போட்டியில் டோணி விளையாடுவது உறுதியாகாமல் இருக்கிறது. கோஹ்லி டி-20 போட்டிகளில் பேட்டிங் ஆர்டரை விட பவுலிங் ஆர்டரையே மிகவும் கவனிக்க கூடியவர் என்பதால் டோணிக்கு ஒரு போட்டியில் ஒய்வு அளிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் டோணிக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் கீப்பிங் செய்வார் என்றும் கூறப்படுகிறது.

கோஹ்லி உதவுவார் அதேநேரம், டிப்ஸ் கேட்கவாவது, எப்படியும் கோஹ்லி, டோணியை அணியில் இருந்து நீக்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் முக்கியமான சமயங்களில் கோஹ்லிக்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பது டோணி மட்டுமே. ஆகவே கோஹ்லி அப்படிப்பட்ட முடிவை துணிந்து எடுக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. ஆனால் டோணி பே்டிங் ஆர்டரை இடம் மாற்றி 4 வது இடத்தில் களம் இறக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here