திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக, 100 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தி வந்தது. பகல் நேரத்தில், சாலையில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. வெப்ப தாக்கத்தால் இரவு நேரங்களில், தூக்கமின்றி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். அருணாசலேஸ்வரர் கோவில் பிரகாரத்தில், கடும் வெயிலால் பக்தர்கள் நடக்க முடியாத நிலை இருந்தது. சூட்டை தணிக்க கோவில் வளாகத்தில் அவ்வப்போது நீர் தெளித்து கொண்டே இருந்தனர். திடீரென நேற்று மாலை, 5:00 மணிக்கு மழை பெய்தது.