சாகித்ய அகாடமி விருது சிறந்த இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும்.
பரிசுத்தொகையாக 1,00,000 ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பல்வேறு பிரிவுகளில் எழுத்தாளர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
இந்நிலையில், மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் நாவலை ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என தமிழில் மொழி பெயர்த்ததற்காக மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மனோஜ் குரூரின் நாவலை ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என தமிழில் மொழிபெயர்த்ததற்காக சாகித்ய அகாடமி விருது ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கே.வி.ஜெயஸ்ரீ கூறுகையில், ‘மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் நாவலை மொழிபெயர்க்குமாறு எழுத்தாளர் ஜெயமோகன் பரிந்துரைத்தார். சங்க கால தமிழ் இலக்கியத்தை குறித்து மலையாள எழுத்தாளர் எழுதியிருந்தது வியப்பை அளித்தது. மொழிபெயர்ப்புக்காக சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வானது மகிழ்ச்சியளிக்கிறது. 20 ஆண்டுகளாக மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட்டு வருகிறேன்’, என தெரிவித்தார்.