காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்றார் ஓம்பிரகாஷ் மிதர்வால்

0
2089
கோல்ட் கோஸ்ட்
காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகின்றன. இந்தியா 11 தங்கப்பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் இருந்து வரும் நிலையில், இன்று ஆண்களுக்கான 50 மீ பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடந்தது. இதில் இந்திய வீரர் ஓம்பிரகாஷ் மிதர்வால் 201.1 புள்ளிகள் பெற்று வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
 இப்போட்டியில் தங்கப்பதக்கத்தை ஆஸ்திரேலிய வீரர் டேனியல் ரெபாசோலியும், வெள்ளிப்பதக்கத்தை வங்காள தேச வீரர் ஷகில் அஹமதுவும் தட்டிச் சென்றனர். இந்தியா 11 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்கள் பெற்று தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here