காணும்பொங்கலை முன்னிட்டு சாத்தனூர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

0
4087

தண்டராம்பட்டு,

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் சாத்தனூர் அணைக்கு அதிக அளவில் செல்வார்கள். சாத்தனூர் அணையின் மொத்த கொள்ளளவு 119 அடியாகும். சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக இந்த அணை தற்போது முழு கொள்ளளவு நிரம்பி காட்சியளிக்கிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அணை நிரம்பி உள்ளது.

இந்த நிலையில் நேற்று காணும் பொங்கலை யொட்டி பல்வேறு ஊர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் சாத்தனூர் அணைக்கு வந்திருந்தனர். இதனால் சாத்தனூர் அணை பகுதியில் எங்கு பார்த்தாலும் பொதுமக்களின் தலையாகவே காட்சியளித்தது. சிலர் வீடுகளில் இருந்து உணவு கொண்டு வந்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்ந்தனர். சிலர் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பூங்காவில் ஊஞ்சல் ஆடியும், சறுக்கியும் விளையாடினர். படகு சவாரியும் நடந்தது. மேலும் சாத்தனூர் அணையில் உள்ள முதலை பண்ணையையும் சுற்றி பார்த்தனர். பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

காணும் பொங்கலை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து சாத்தனூர் அணைக்கு 30 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here