சென்னை: பிரபல நகைச்சுவை நடிகரான சூரி, தனது காளையை குளிப்பாட்டும் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் சூரி. அவரது அசத்தலான மதுரை ஸ்லாங்கை ரசிப்பதற்காக பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது.
விஜய், அஜித், விஷால், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். தற்போது லாக்டவுன் என்பதால் தனது குடும்பதினருடன் நேரத்தை கழித்து வருகிறார்.
டிவிட்டரில்.. குழந்தைகளை குளிக்க வைப்பது, வீட்டை சுத்தம் செய்வது. அவ்வப்போது கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசுவது என தனது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் தனது குடும்பத்தினருடன் இருக்கும் போட்டோக்களையும் அவ்வப்போது தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.
காளையை குளிக்க வைத்து.. அந்த வகையில் தற்போது சில போட்டோக்களை நடிகர் சூரி தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் தனது கருப்பன் என்ற காளையுடன், கம்மாய்க்கரைக்கு செல்லும் நடிகர் சூரி, தனது காளையை தேய்த்து குளிக்க வைக்கிறார்.
கருப்பன் நடந்து போனா தலையில் முண்டாசு, காவி வேட்டி, கருப்பு பனியன் என அசத்தலாக உள்ளார் சூரி. அந்த போட்டோவுக்கு ஊரடங்குக்கு நடுவுல ஊரே அடங்கி நிக்கும் – எங்க “கருப்பன்” நடந்து போனா!! என தான் காளையுடன் இருக்கும் போட்டோக்களுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார்.
வைரல் போட்டோ இந்த போட்டோக்களை இதுவரை 23 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரீடிவிட் செய்துள்ளனர். இந்த போட்டோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.