இளைய தளபதி விஜய் மற்றும் அட்லி இவர்கள் கூட்டணியில் தெறி, மெர்சல் ஆகிய வெற்றி படங்கள் ஏற்கனவே வந்த நிலையில். தற்போது மூன்றாவது முறையாக சேர்ந்துள்ளனர். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
தற்காலிகமாக ‘தளபதி 63’ என்று அழைக்கின்றனர். ஏற்கனவே விஜய் ஜோடியாக நயன்தாரா, காஜல் அகர்வால், சமந்தா, அனுஷ்கா, தமன்னா என்று முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர். சர்கார் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக வந்தார். புதிய 63–வது படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார் என்று எதிர்பார்ப்பு நிலவியது.
நயன்தாரா, சமந்தா ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. இப்போது ராஷ்மிகா மடன்னாவின் பெயரையும் பரிசீலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் ரசிகர் ஒருவரும் ராஷ்மிகாதான் விஜய் ஜோடியாக நடிக்கிறார் என்று டுவிட்டரில் பதிவிட்டார். அந்த டுவிட்டரின் கீழே ராஷ்மிகா, ‘‘டேய் எனக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடாதேடா’’ என்று தமாஷாக குறிப்பிட்டு உள்ளார்.