இந்தியன் வங்கியில் அதிகாரி 145 பணிகள்

0
2653

பொதுத்துறை வங்கிகளில் ஒன்று இந்தியன் வங்கி. சென்னையை தலைமை இடமாகக் கொண்டு இந்த வங்கி செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த வங்கியில் தகவல் தொழில்நுட்ப துறை மற்றும் டிஜிட்டல் பேங்கிங் துறையில் அதிகாரி தரத்திலான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

உதவி பொது மேலாளர், தலைமை மேலாளர், முதுநிலை மேலாளர், மேலாளர் போன்ற பதவிகளுக்கு பல்வேறு பிரிவில் பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 145 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஸ்கேல் 1 முதல் ஸ்கேல் 5 தரத்தில் பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 45 வயதுடையவர் களுக்கு பணி உள்ளது. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி

கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேசன், ஐ.டி. எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் டெலி கம்யூனிகேசன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற பிரிவில் பொறியியல் அல்லது தொழில்நுட்ப பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. முதுநிலை பொறியியல், தொழில்நுட்பம் படித்தவர்களுக்கும் வாய்ப்பு உள்ளது.

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு, கல்வித்தகுதி, பணி அனுபவம் வேறுபடுகிறது. அந்தந்த பணிக்கான சரியான கல்வித் தகுதி வயது வரம்பு விவரத்தை இணைய தளத்தில் பார்க்கலாம்.

தேர்வு செய்யும் முறை

நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். மிகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்தால் முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் அடுத்த கட்டமாக நேர்காணலுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 10-4-2018-ந் தேதி முதல் விண்ணப்பப் பதிவு தொடங்குகிறது. 2-5-2018-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங் களை ெதரிந்து கொள்ளவும் www.indianbank. in என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here