அரசு ஊழியர்களின் ஊதியம் 2.57 மடங்கு உயருகிறது… முதல்வரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
4146
edapadi-admk-minister113

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியம் 30 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் தொடர்பாக விவாதிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் குறித்து அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவின் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் இதையடுத்து 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை ஏற்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. இதனால் அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் 30 சதவீதம் வரை உயருகிறது.

அதிகபட்சம் எவ்வளவு அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு முதல்வர் வெளியிட்ட அரசாணையில், குறைந்தபட்ச ஊதியமாக ரூ.6,100 பெற்றவர்களுக்கு இனி ரூ. 15,700-ம் அதிகப்பட்ச ஊதியமாக ரூ.77,000 பெற்றவர்களுக்கு இனி ரூ.2.25 லட்சமும் உயர்த்தி வழங்கப்படும். அதாவது 2.57 மடங்கு ஊதியம் அதிகரித்துள்ளது.

எத்தனை கோடி அதேபோல் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு இந்த உயர்வு பொருந்தும். இதன் மூலம் 12 லட்சம் அரசு ஊழியர்களும், 7 லட்சம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களும் பயனடைவர். ஊதிய உயர்வு மூலம் அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக ரூ.8016 கோடியும், ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதலாக ரூ.6703 கோடியும் என அரசுக்கு மொத்தம் ரூ .14,719 கோடி செலவாகும்.

பணிக்கொடையும் உயர்வு தொகுப்பூதியம், மதிப்பூதியம் பணியாளர்களுக்கும் 30 சதவீத ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கு ரூ10 லட்சம் வழங்கப்பட்ட பணிக்கொடை ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது. அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு ஊழியர்கள், கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் என அனைத்து துறைகளிலும் பணியாற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.3000-ஆகவும், அதிகபட்சமாக ரூ.11,100-ஆகவும் உயர்த்தியுள்ளது

இந்த மாதம் முதல் தேதி இந்த ஊதிய உயர்வு 2016-ஆம் ஆண்டு கருத்தியலாக அமல்படுத்த முதல்வர் ஆணையிட்டுள்ளார். இந்த மாதம் ஒன்றாம் தேதி பணப்பயனாக வழங்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here