கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்

0
167

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது. பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென ஏற்படும் போர் பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து பின்னர் கணிசமாக குறைகிறது.

அந்த வகையில், கடந்த 14-ந் தேதி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.9,320-ம், பவுனுக்கு ரூ.74,560 என விற்பனையானது. அதன் பின்னர் தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.9,050-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.440 குறஇந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.9,050-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.72,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல வெள்ளி விலை ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.120-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

04.07.2025 – ஒரு சவரன் ரூ. 72,400 (இன்று)

03.07.2025 – ஒரு சவரன் ரூ. 72,840 (நேற்று)

02.07.2025 – ஒரு சவரன் ரூ. 72,520 (நேற்று முன்தினம்)

01.07.2025 – ஒரு சவரன் ரூ. 72,160

30.06.2025- ஒரு சவரன் ரூ. 71,320

29.06.2025- ஒரு சவரன் ரூ. 71,440

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here