தயாரிப்பாளர் வெங்கட அப்பா ராவ், 100 பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தி இருப்பதாக நடிகை ஸ்ரீரெட்டி சமூக வலைத்தளத்தில் புதிய புகாரை வெளியிட்டு இருப்பது தெலுங்கு திரையுலகில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #SriReddy #SriLeaks #VakadaAppaRao
தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். சினிமா வாய்ப்பு தருவதாக ஏமாற்றி பிரபலங்கள் பலர் தன்னிடம் செக்ஸ் வைத்துக்கொண்டதாகவும் அவர்கள் பெயர்களை ஸ்ரீலீக்ஸ் முகநூல் பக்கத்தில் தொடர்ந்து வெளியிடுவேன் என்றும் அறிவித்து உள்ளார்.
சில நடிகர்களும், தயாரிப்பாளர்களும் ஐதராபாத்தில் உள்ள ஸ்டூடியோக்களை சிவப்பு விளக்கு பகுதியாக பயன்படுத்தி அங்கு பெண்களிடம் செக்ஸ் வைத்துக்கொள்வதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். தற்போது பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் வெங்கட அப்பாராவ் மீதும் ஸ்ரீரெட்டி செக்ஸ் புகார் கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் வெங்கட அப்பா ராவ் 100 பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தி இருக்கிறார். அவர்களில் 16 வயது சிறுமிகளும் உண்டு” என்று சமூக வலைத்தளத்தில் புதிய புகாரை வெளியிட்டு இருக்கிறார்.
ஸ்ரீரெட்டி சொல்வது உண்மைதான். எங்களுக்கும் அப்பாராவ் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று பல பெண்கள் ஐதராபாத்தில் உள்ள டெலிவிஷன் சேனலுக்கு போன் செய்து புகார் கூறினார்கள்.
ஸ்ரீரெட்டி கூறியதில் உண்மையில்லை என்று தயாரிப்பாளர் வெங்கட அப்பாராவ் மறுத்துள்ளார்.