வடகிழக்கு பருவமழை | உதவி எண்கள் | செம்பரம்பாக்கம் ஏரி -வீடியோ

0
3438

சென்னை : வடகிழக்கு பருவமழை காரணமாக 2 நாட்களாக விடாமல் பெய்து வரும் கனமழையின் எதிரொலியாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரியான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 68 அடியை எட்டியுள்ளது. சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளில் முக்கியமானது செம்பரம்பாக்கம் ஏரி. மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் அதிக அளவில் நீர் வரத்து இருந்ததால் நள்ளிரவில் திறந்து விடப்பட்ட வெள்ளநீர் சென்னை மக்களை கடுமையாக பாதித்தது.

இந்நிலையில் அதே போன்று கனமழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்வதில் மக்கள் ஆர்வமாக உள்ளனர். கடநத் 2 நாட்களாக சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரிப் பகுதியிலும் நேற்று 17 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பெய்துள்ளது. இதே போன்று செம்பரம்பாக்கம் ஏரியின் முக்கிய நீர்வரத்து கால்வாய்களான கிருஷ்ணா கால்வாய், சுவுத்திரி கால்வாய், பங்காரு கால்வாய், நேமம் கால்வாய் வழியேயும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது

68 அடியை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 85.4 அடி உயரம் கொண்ட இந்த செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 364.5 கோடி கன அடி (3645 mcft) ஆகும். இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 68.90 அடியாக உள்ளது.

ஆபத்து இல்லை ஏரியில் 452 கோடி கன அடி அளவிற்கு நீர் உள்ளது (452 mcft). ஏரிக்கு 1,719 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. ஏரியில் இருந்து 52 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது கடந்த ஆண்டில் செம்பரம்பாக்கம் ஏரியில் 582 கோடி கனஅடி நீர் இருந்துள்ளது, எனவே தற்போதைக்கு செம்பரம்பாக்கம் ஏரியால் எந்த பாதிப்பும் இல்லை

பூண்டி ஏரியும் உயர்ந்து வருகிறது சென்னை பூண்டி ஏரி மொத்த கொள்ளளவான 140 அடியில் 129.69 அடியை எட்டியுள்ளது. சோழவரம் ஏரி மொத்த கொள்ளளவான 64.5 அடியில் 31.99 அடியை எட்டியுள்ளது.

மிதமான மழை பதிவு செங்குன்றம் ஏரி மொத்த கொள்ளளவான 50.20 அடியில் 31.99 அடியை எட்டியுள்ளது. இதனைத் தவிர்த்து கொரட்டூர் அணைக்கட்டு பகுதியில் 7 சென்டிமீட்டர் மழையும், தாமரைப்பாக்கம் பகுதியில் 8.2 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here