சென்னை: ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் வெற்றி குறித்து, ஹர்பஜன் சிங் தமிழில் டுவிட் செய்துள்ளார்.
11வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. அதில் முதலில் விளையாடிய ஐதராபாத் அணி, 178 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய சென்னை அணியின் வாட்சன், 117 ரன்கள் குவித்தார்.
ஒட்டுமொத்த அணியும் சிறப்பாக விளையாடியதன் மூலம், 18.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து சென்னை அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் சென்னை அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள சென்னை அணி வீரர் ஹர்பஜன் சிங், எமை அடித்து, அழுத்தி ஆட(ள) முற்பட்ட போதும், மக்கள் சக்தியாக பல சூழ்ச்சி கடந்து போராடி கிடைத்த வெற்றி. வெற்றி மக்களுக்கு சமர்ப்பணம்.