பக்கோடா வேலைக்கும் இப்போ ஆப்பு…வீடியோ சென்னை: பக்கோடா விற்பது குறித்து பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியதை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். பட்ஜெட்டுக்கு முன்னதாக தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த பிரதமர் மோடி பக்கோடா விற்பவர் கூட நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் சம்பாதிக்கிறார். இதனை வேலை வாய்ப்பாக எடுத்துக்கொள்ள முடியாதா என்றார். இந்நிலையில் வேலையில்லாமல் இருப்பதை விட பக்கோடா விற்பது எவ்வளவோ மேல் என பாஜக தேசிய செயலாளர் தெரிவித்தார். இதனை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.