கரு: ஆண் பாலியல் தொழிலாளியாக பணிபுரிய போய் ஆபத்தில் மாட்டிக் கொள்ளும் ஒரு இளைஞனைப் பற்றிய படம் தான் போத.
கதை: சினிமாவில் பெரிய நடிகனாக வேண்டும் எனும் லட்சியத்துடன் சென்னையில் ராகுல் தாத்தா தயவில் பெரிய அப்பார்ட்மெண்ட்டில் தன் நண்பனுடன்தங்கியிருக்கும்விக்கி, செலவுக்கு காசு வேண்டி, அப்படி, இப்படி ஆண் பாலியல் தொழிலாளியாக மாறி வசதியான வீட்டு பெண்களின் விரக தாபங்களைதீர்த்து வைப்பதை உபதொழிலாக்கி கொள்கிறார். இவரது புது கஸ்டமரானஒரு இளம் ஆன்ட்டி வீட்டிற்கு அப்படி செல்லும் விக்கிக்கு, அவரது வீட்டில் 2 கோடி பணம் இருப்பது இவரது அறை நண்பர் மூலம் தெரிய வருகிறது.
நண்பனின் ஆலோசனைப்படி, அதை ஆட்டைய போட்டு கோடீஸ்வரனாகி படம் தயாரித்து நாயகராக நடிக்கத் துடிக்கும் விக்கி, எக்குத்தப்பாய்எதிர்பாராமல் மரணமடையும் அந்த இளம் ஆன்ட்டியை கொலை செய்ததாக போலீஸில் வகையாக சிக்கும் விக்கி, இரண்டு கோடிக்கு ஆசைப்பட்டதால், கொலை கேஸில் சிக்கியதோடு போலீஸின் நண்டுபிடியிலிருந்து மீண்டாரா? இல்லையா? ஆன்டியை கொன்றது யார் ?இரண்டு கோடியை ஆட்டைய போட்டது யார்..? என்பது உள்ளிட்ட இன்னும்பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும் விறு விறுப்பாகவும், காமெடியாகவும் கலர்புல்லாகவும் விடையளிக்க முயற்சிக்கிறது “போத” படத்தின் கதையும், களமும்.
காட்சிப்படுத்தல்: “50 – 50 பிலிம்ஸ் எண்டர்டெயின்மென்ட்” நிறுவன தயாரிப்பில், சுரேஷ்.ஜி எழுத்து, இயக்கத்தில், சித்தார்த் விபின் இசையில் அறிமுக நாயகர் விக்கியுடன் ராகுல் தாத்தா உள்ளிட்ட பிரபலங்களும் ஏராளமான புதுமுகங்களும் நடிக்க,ஆண் பாலியல் தொழிலாளியாக பணிபுரிய போய் ஆபத்தில் மாட்டிக் கொள்ளும் ஒரு இளைஞரை பற்றிய கதையம்சத்துடன், காமநெடி தூக்கலின்றி, காமெடியாக சொல்லும் விதமாக காட்சிப்படுத்தப்பட்டு வந்திருக்கும் படமான “போத” படத்தின் பின் பாதி காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் பாராட்டிற்குரியது.
கதாநாயகர்: நடிகனாவதற்காக எதையும் செய்யத்துணியும் இளைஞர் மணிகண்டனாக அறிமுக நாயகர் விக்கி, புதுமுகம் என்பதையும் தாண்டி பாத்திரத்திற்கு பக்கா பலம் சேர்த்திருக்கிறார்.
கதாநாயகி: படத்தில் கதாநாயகி மற்றும் டூயட் பாடல்கள்இல்லாதது குறையா? நிறையா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டாம்.
பிற நட்சத்திரங்கள்: நாயகருக்கு குறைந்த வாடைகையில் அடைக்கலம் கொடுக்கும் பெருசாக ராகுல் தாத்தா,இளம் ஆன்ட்டி வீட்டில் 2 கோடி பணம் பற்றி சொல்லும் சுருட்டை முடி காமெடி நண்பர், கெஸ்ட் ரோலில் வரும் மறைந்த பழம்பெரும் நடிகர் சண்முகசுந்தரம், பெண்களுக்கு இளைஞர்களை வைத்து ஹைடெக்சேவை செய்யும் நடிகர் டூப்ளிகேட் சந்திரபாபுவும் அவரது சகாக்களும் மற்றும் கடலை மிட்டாய் குத்து ஸ்பெஷல் போலீஸ் இன்ஸ்’ என படத்தில் இடம் பிடித்திருக்கும் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் காமெடியாக வந்து கதாநாயகி என்று யாரும் இல்லாத குறையை போக்குவது ஆறுதல்.
அதிலும், “உன் மேல உண்டான….. வி லவ் யூ மணி….” எனத் தொடங்கித் தொடரும் ஒத்த குத்துப் பாட்டுக்கு ஆடும் ரிஷாவும்., புருஷன் மார் அந்த விஷயத்தில் சரியில்லாததால் நம் நாயகரோடு சல்லாபத்தில் ஈடுபடும் இரு இளம் ஆன்ட்டிகளும் இப்படத்தில் நாயகி என்று யாருமே இல்லாத குறையை ரொம்பவே தீர்த்திருக்கின்றனர் வாவ்!
தொழில்நுட்பகலைஞர்கள்: தியாகராஜனின் படத்தொகுப்பில் காமெடி எனும் பெயரில் கடிக்கும், ஆரம்ப அரைமணி நேரத்தை, அப்படியே கத்தரித்திருக்கலாம் மற்றபடி ஒ.கே. ரத்னகுமாரின் ஒளிப்பதிவு ஓவியப் பதிவு, சித்தார்த் விபின் இசையில், “வாழ்க்கையில ஆயிரம் போத….” ,” உன் மேல உண்டான ….. வி லவ் யூ மணி” ஆகிய இரு பாடல்களும் பின்னணி இசையும் பெரிய ப்ளஸ்!
பலம்: ” உன் மேல உண்டான ….. வி லவ் யூ மணி….” எனத் தொடங்கித் தொடரும் ஒத்த குத்துப் பாட்டுக்கு ஆடும் ரிஷாவும், புருஷன் மார் அந்த விஷயத்தில் சரியில்லாததால் நம் நாயகரோடு சல்லாபத்தில் ஈடுபடும் இரு இளம் ஆன்ட்டிகளும் இப்படத்தில் நாயகி என்று யாருமே இல்லாத குறையை ரொம்பவே தீர்த்திருக்கின்றனர் என்பது பலம்!
பலவீனம்: காமெடி என்ற பெயரில் ஆரம்ப அரை மணி நேரத்தில் “இனிமே வாடகையே குடுக்க மாட்டோம்இந்த வாடை மட்டும் தான் கொடுப்பேன்…” என நாயகரின் காமெடி சுருட்டை முடி நண்பர் ராகுல் தாத்தா பக்கம் திரும்பி “டர் புர் … என கேஸ் ரிலீஸ் செய்வது…. உள்ளிட்டஅருவெறுக்கத்தக்க காட்சிகள் பெரும் பலவீனம்
இயக்கம்: புதியவர் சுரேஷ்.ஜியின் எழுத்து, இயக்கத்தில், ஒரு மணி நேரம் நாற்பது நிமிட படமாக, கிட்டத்தட்ட காசுக்காக, பாதை மாறும் இளைஞர்களுக்கு பாடம் புகட்டும் படமாக வந்திருக்கும் “போத”, “கிக்காலோ” அப்படின்னா, ஆம்பளை அயிட்டம் … என்பதை ரசிகனுக்கு விளங்க வைப்பதும்., “இதுவே செகண்ட் & லாஸ்ட் ஆக இருக்கணும் …. ” எனபயந்தபடியே நம் ஹீரோ “கிக்காலோ”வுக்கு இளம் ஆன்ட்டி, போன் போடுவதும், “அங்க, போதும் போதும்னு சொல்லிட்டு, இங்க போட்டு கொடுத்துட்டாளே … ” என்று ஆன்ட்டி கஸ்டமரை திருப்திபடுத்த முடியாத வேறு ஒரு கட்டுமஸ்து “கிக்காலோ” புலம்புவதும்உள்ளிட்ட “கிக் ” கான சங்கதிகளையும் காமெடியாக சொன்ன விதத்தில் ஜெயித்திருக்கிறது என்றாலும்,காமெடி என்ற பெயரில் ஆரம்ப அரை மணி நேரத்தில் “இனிமே வாடகையே குடுக்க மாட்டோம்இந்த வாடை மட்டும் தான் கொடுப்பேன்…” என நாயகரின் காமெடி சுருட்டை முடி நண்பர் ராகுல் தாத்தா பக்கம் திரும்பி “டர் புர் …” என கேஸ் ரிலீஸ் செய்வது…. உள்ளிட்ட உவ்வே ‘ரக அருவெறுக்கத்தக்க காட்சிகளை இயக்குனர் சுரேஷ்.ஜி நினைத்தால் தவிர்த்திருந்திருக்கலாம்.
அவ்வாறு தவிர்த்திருந்தால்., “போத” இளம் ரசிகர்களுக்கு இன்னும் “போத” யாக இருந்திருக்கும்!
பைனல்” பன்ச் “: மொத்தத்தில்., “போத’ – பணத்திற்காக ‘பாத’ மாறத் துடிக்கும் இன்றைய இளைஞர்களுக்கு நிறைய நல் ‘போத(னை) விதைத்திருக்கிறது!