டிரம்ப் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ரூ.100 கோடி செலவிடுவதா

0
1895

சமாஜ்வாடி கட்சி பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ராமசங்கர் ராஜ்பார் உத்தரபிரதேச மாநிலம் தியோரியாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–
ஆமதாபாத்தில் ‘நமஸ்தே டிரம்ப்‘ என்ற டிரம்ப் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ரூ.100 கோடி செலவழிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் பொருளாதார மந்தநிலை, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்றவை நிலவும்போது, ஒரு தனிநபர் வரவேற்புக்கு ரூ.100 கோடி செலவிட்டது நாட்டுக்கு நல்லதல்ல.

டிரம்ப் வருகையையொட்டி, அமெரிக்க பொருட்கள் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பால் பொருட்கள், வேளாண், மருத்துவ பொருட்களுக்கு இந்திய சந்தை திறந்து விடப்பட்டுள்ளது. இது, மக்களுக்கு துரோகம் இழைக்கும் செயல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here