ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மை தான் உறவினர் லலிதா பேட்டி

0
3340
தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு(2016) டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார். வருகிற 5-ந்தேதியுடன் அவர் இறந்து 1 ஆண்டு நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்ற பெண், தான் ஜெயலலிதாவின் மகள் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது உண்மை தான் என்று அவருடைய நெருங்கிய உறவினர் பெங்களூருவை சேர்ந்த லலிதா என்பவர் பரபரப்பு தகவலை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
“எனது தாயார் ஜெய்சிகா. அவரது சகோதரர் ஜெயராமின் மகள் தான் ஜெயலலிதா. கடந்த 1971-ம் ஆண்டு ஜெயலலிதாவின் தாயார் இறந்துவிட்டார். அதன் பிறகு ஜெயலலிதாவுக்கும், எங்கள் குடும்பத்திற்கும் இடையே அவ்வளவாக தொடர்பு இல்லாமல் இருந்தது.
இந்த சூழ்நிலையில் கடந்த 1980-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு ஒரு பெண் குழந்தை சென்னையில் வைத்து பிறந்தது உண்மை தான். எனது பெரியம்மாள் ஜெயலட்சுமி தான் அவருக்கு பிரசவம் பார்த்தார்.
அப்போது ஜெயலலிதா எங்களிடம் ஒரு சத்தியம் வாங்கினார். அதாவது தனக்கு குழந்தை பிறந்துள்ள தகவலை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று சத்தியம் வாங்கினார்.
அதன்பிறகு வருடங்கள் எத்தனையோ கடந்து ஓடிவிட்டன. தற்போது ஜெயலலிதாவின் மகள் நான் தான் என்று அம்ருதா கூறுகிறார். அந்த பெண் குழந்தை அம்ருதா தானா? என்பது எனக்கு தெரியாது. ஆனால் ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மை. இதுகுறித்து மருத்துவ பரிசோதனை(டி.என்.ஏ. பரிசோதனை) செய்தால் மட்டுமே தெரியவரும்.” இவ்வாறு லலிதா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here