சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்: ஜூன் 1ம் தேதி முதல் ஆரம்பம்!

0
3149

சென்னையில் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 1ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

சென்னையில் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜூன் 1ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களை தனியார் நிறுவனத்தில் பணியமர்த்தம் செய்வதற்கான முகாம்  1ம் தேதி தொடங்கவுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், 10க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களது நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். இந்த முகாமில், 8, 10, 12 மற்றும் ஐடிஐ, டிப்ளோமா, பட்டப்படிப்பு முடித்தவர்கள் பங்கேற்கலாம்.

வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்களது கல்விச்சான்றிதழ், பாஸ்கோர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை ஆகியவற்றை கொண்டு வரவேண்டும். பணிக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும். இலவசமாக நடத்தப்படும் இந்த முகாமி, யாரும் கட்டணம் செலுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here