சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்து சேவைகள் நிறுத்தம்

0
1608

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையையொட்டி தமிழக அரசு 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவை நேற்று முதல்-அமைச்சர் பழனிச்சாமி நேற்று மதியம் அறிவித்த நிலையில், உடனே பலரும் சொந்த ஊருக்கு சென்றுவிட வேண்டும் என கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு குவிய தொடங்கினர். ஆனால் போதிய பேருந்துகள் இல்லாததால் நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆம்னி பேருந்துகளும் நிரம்பி வழிந்தன. 

இதையடுத்த நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர சென்னையில் இயக்கப்பட்டு வந்த எம்டிசி பேருந்துகளை வெளியூர்களுக்கு இயக்கி மக்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். இன்று  மாலை வரை கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் அறிவித்தார். 
சென்னை, கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாநகரங்களிலிருந்து நேற்று மாலை ஏராளமானோர் சொந்த ஊருக்குப் புறப்பட்டு சென்றனர். 
இந்தநிலையில், 144 தடை மாலை அமலுக்கு வரும் நிலையில் சென்னையில் இருந்து திருச்சி, மதுரைக்கான பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து விழும்புரம்,வேலூர், ஆரணி உள்ளிட்ட குறைந்த தூர ஊர்களுக்கு மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மாவட்ட எல்லைகள் மூடப்பட உள்ளதால் சென்னையில் இருந்து நீண்ட தூர ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணிக்கு 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here