உங்க தொப்பையை சும்மா அசால்ட்டா குறைக்கணுமா?

0
2154

எல்லாருக்கும் இருக்கும் பெரிய கவலை தொப்பையை குறைப்பது தான். அவங்களும் என்னென்னவோ செய்து பார்ப்பாங்க ஆனா தொப்பை குறைந்தபாடே இருக்காது. இடுப்புப் பகுதியில் தேங்கி இருக்கும் கொழுப்பை கரைப்பது மிகவும் கடினமான ஒன்று. இதற்கு நீங்கள் இரண்டு மடங்கு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

நிறைய பேருக்கு இதற்கு நேரமே இருப்பதில்லை. ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வது எல்லாம் கடினமான விஷயமாக நினைக்கின்றனர். அதற்காகத் தான் நாங்கள் சில எளிய பயிற்சிகளை உங்களுக்கு வழங்குகிறோம். இதன் மூலம் உங்கள் இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பை 5 வாரத்திலேயே 5 அங்குலம் வ

 

படிக்கட்டுகளில் ஏறுங்கள் * இந்த உடற்பயிற்சியின் போது நீங்கள் மாடிப் படிக்கட்டுக்களில் ஏற வேண்டும். படிக்கட்டுகள் மிகப் பெரிய அளவில் இருக்கக் கூடாது. இல்லையென்றால் நீங்கள் விழ நேரிடலாம். மேலும் படிக்கட்டுக்களில் ஏறும் போதும், இறங்கும் போது நன்கு சுவாசிக்க வேண்டும். * இந்த உடற்பயிற்சி உங்கள் வயிற்று தொப்பையை விரைவில் குறைக்க உதவியாக இருக்கும். இதை தினசரி செய்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

 

குதித்தல் * இந்த உடற்பயிற்சியின் போது மாடி படிக்கட்டுகளில் நின்று கொள்ளுங்கள். உங்கள் இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது குதியுங்கள். * இந்த உடற்பயிற்சி செய்யும் போது ஆழ்ந்த சுவாசத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இது ஒரு எளிமையான பயிற்சியாகும். எனவே நீங்கள் ஒரு நேரத்தில் 40-50 முறை எளிதாக செய்யலாம். * இது வயிற்று கொழுப்பைக் குறைப்பதோடு, அடி வயிற்றுப்பகுதிக்கு நல்லதும் கூட.

 

ட்ரைசெப்ஸ் டிப்ஸ்

* இந்த பயிற்சிக்கு படிகட்டிகளில் பின்னோக்கி நின்று கொள்ளுங்கள். இப்பொழுது படிக்கட்டுகளில் பின்னோக்கி செல்லும் வகையில் கைகளை முதல் படியில் வைக்க வேண்டும். * இப்பொழுது கால்களை முன்னோக்கி நீட்டிக் கொண்டு உடலை ஒட்டுமொத்தமாக தூக்கி தூக்கி இறக்குங்கள். * கைகளை பலமாக படிகட்டிகளில் பிடித்துக் கொண்டு உடலை தூக்குங்கள். * இந்த உடற்பயிற்சி அடிவயிற்றுப் பகுதியில் இருக்கும் கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. கைகள், முதுகு மற்றும் இடுப்பை வலிமையாக்குகிறது.

 

பேலன்ஸ் பிளான்க் * இந்த உடற்பயிற்சி செய்ய முதலில் பிளாங் நிலைக்கு வாருங்கள். * உங்கள் உள்ளங்கைகளை தரையில் இருந்து படிகட்டிகளில் வைக்கவும். கால்களை நேராக வைத்து பாத விரல்கள் தரையை தொடும்படி வைக்கவும். * இதற்குப் பிறகு, உங்கள் இடது கை மற்றும் வலது காலை மேலே உயர்த்தவும். * இந்த நிலையில் 15 விநாடிகள் நின்ற பின் கைகளையும் கால்களையும் மீண்டும் தங்கள் இடத்திற்கு கொண்டு வந்து, பின்னர் வலது கை மற்றும் இடது காலை உயர்த்தவும். * இதை 10 தடவை செய்து வாருங்கள். இடுப்புப் பகுதியை சுற்றி தொங்குகின்ற சதைகள் நன்றாக குறையும்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here