திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் திருவண்ணாமலை தாலுகா வியாபாரிகள் சங்கத்தினர் தற்காப்பு நடவடிக்கையின் காரணமாக கடைகள், வணிக நிறுவனங்களை 10 நாட்கள் மூட முடிவு செய்தனர். அதன்படி, நேற்று திருவண்ணாமலை நகரில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.
ஆனால் பேக்கரி கடைகள், பழக்கடைகள், காய்கறி கடைகள், பெட்டிக்கடைகள், டீக்கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. ஓட்டல்களில் பார்சல் வழங்கப்பட்டது. காலை 10 மணி வரை பொதுமக்களின் நடமாட்டம் இருந்தது.
கடைகள் அடைக்கப்பட்டதாலும், நேற்று விடுமுறை தினம் என்பதாலும் மற்றும் சூரிய கிரகணம் என்பதாலும் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.