அரசு கலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க இணையதள வாயிலாக ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி ஜூலை 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் மாணவர்கள் www.tngasa.in,www.dceonline.org என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் மாணவர்கள் இணையதள வாயிலாக சான்றிதழ்களை ஜூலை 25ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை பதிவேற்றலாம். பொதுப்பிரிவினர் 48 ரூபாய் விண்ணப்ப கட்டணம் மற்றும் 2 ரூபாய் பதிவு கட்டணத்தை இணையதள வாயிலாக செலுத்தலாம். இதில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. பதிவு கட்டணம் 2 ரூபாய் மட்டும் செலுத்த வேண்டும்.