மாவட்ட நிர்வாகம் சார்பில் 50 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்படும்

0
2088

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள வேங்கிக்கால் ஏரிக்கரையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலமாக 500 பனை விதைகள் நடவு செய்யும் பணிகள் நேற்று காலை நடைபெற்றது. இதில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி பனை விதைகளை நடவு செய்து தொடங்கி வைத்தார்.

இதில் உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், வேளாண்மை உதவி இயக்குனர் செல்வராஜ், தாசில்தார் மனோகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சஞ்சீவிகுமார், பிரகாஷ், வேங்கிக்கால் ஊராட்சி செயலாளர் சுப்பிரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தம் அருகில் உள்ள கடை வியாபாரிகள், பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகள் பயன்படுத்துவது குறித்து கலெக்டர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதுகுறித்து கலெக்டர் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதில் மாற்று பொருட்கள் பயன்படுத்துவதற்காக பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பிளாஸ்டிக் கவர்கள், பேப்பர்களுக்கு பதிலாக இலைகள் பயன்படுத்த வேண்டும். திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் 50 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்பட உள்ளது’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here