ஒரு மாற்று யோசனை
” ஹெல்மெட்… கட்டாயம் தேவை…
ஆவண பறிப்பு… on the spot fine கட்டாயம் தேவையா?…”
“இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மட்டுமல்ல, பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்…
அவ்வாறு அணியாவிட்டால்…
ஓட்டுநரின் உரிமம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்யுமாறு, சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்ய, தமிழக அரசு அதனை ஏற்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது…”
ஒரு மாற்று யோசனை
ஹெல்மெட் இல்லாத வாகன ஓட்டிகளிடம், ரூ.500 அல்லது ரூ.1000 ரூபாய் வாங்கி கொண்டு ஒரு நல்ல தரமான தலைக்கவசத்தை அவர்களிடம் கொடுத்து, அணிய வைக்கலாம்…
இதனால் மறுமுறை அவர், நிச்சயம் தலைக்கவசம் இல்லாமல் வரமாட்டார்…
அப்படியே வந்தாலும்…
மறுபடியும் அவர்களிடம் பணம் வாங்கி இரண்டாவதாகவும் தலைக்கவசத்தை கொடுக்கலாம்…
இதனால் மூன்றாவது தடவையும் தலைக்கவசம் இல்லாமல் வருவார்களா?…
அட, அப்படியும் தலைகவசம் இல்லாமல் வரட்டுமே…
எத்தனை தடவை தலைக்கவசம் இல்லாமல் வந்தாலும்…
அத்தனை தடவையும், பணத்தை வாங்கிக்கொண்டு தலைக்கவசம் கொடுக்கலாமே?…
நிச்சயம் மறுபடி, மறுபடி வரமாட்டார்…
ஏனென்றால், எத்தனை தலைக்கவசம் தான் அவர்கள் வாங்குவார்?
இதே மாதிரியான விதிகளை வாகன இன்சூரன்ஸ் விஷயத்திலும் கடைபிடிக்கலாம்…
இன்ஸ்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு
ரூ.700/- அல்லது ரூ.1000/- வாங்கிகொண்டு இன்சூரன்ஸை போட்டு கொடுக்கலாம்…
மறுபடி நிச்சயம், அவர் இன்சூரன்சோடு தானே வருவார்…
அதே போல் ஓட்டுநரின் உரிமம் இல்லாமல் வந்தால், LLR போட்டு கொடுக்கலாம்…
ஒரு வருடத்தில் அனைவரும் அனைத்தும் வைத்து இருப்பார்கள்…
“மக்களுக்காக மக்களால் உருவாக்க பட்ட(து)” நம் அரசின் கவனத்திற்கு இதனை கொண்டு செல்ல, இந்த யோசனையை அனைவருக்கும் பகிருங்கள்…
“முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மட்கட்கு
இறையென்று வைக்கப் படும்.”
உங்கள் மனதுக்கு சரி என்று தோன்றினால் மறக்காமல் ஷேர் பண்ணுங்கள்
நல்ல மாற்றம் ஏற்படும் என நம்புவோம்…
நம்பிக்கை நல்ல மாற்றம் தரும்…
Writer – Gangadharan -Tvmalai.co.in