இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிலையில், வரும் 22 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் உள்ள கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது. பிரதமர் மோடி அறிவித்த சுய ஊரடங்கு உத்தரவை ஏற்று இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.