இந்தியன் வங்கியில் பாதுகாவலர் பணிக்கு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.இந்தப் பணிக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, ஊதிய விகிதம் குறித்த விவரங்களை www.indianbank.in என்ற இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.மொத்த காலிப்பணியிடங்கள் 34. விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 31 ஆகும். எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பித்துப் பயன் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.