மாவட்ட மைய நூலகத்தில் பயிர் மருத்துவ முகாம்

0
1758
திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் பயிர் மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட நூலக அலுவலர் கோகிலவாணி தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி கலந்து கொண்டு விவசாயிகளுக்கான ஒலி வடிவ குறுஞ்செய்தி தகவல் மற்றும் விவசாய உதவி எண்கள் சேவையை தொடங்கி வைத்து பேசினார். மேலும் மைய நூலகத்தின் வளர்ச்சிக்காக ரூ.5001-ஐ வழங்கி பெரும்புரவலராக சேர்ந்தார்.
நிகழ்ச்சியில் மா.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை முதன்மை விஞ்ஞானிகள் ராஜ்குமார், கிரிஜா ஆகியோர் பயிர் மருத்துவ முகாம் பற்றிய விவரங்களை எடுத்துரைத்தனர். பயிர் மருத்துவர்கள் செந்தில்குமரன் மற்றும் சுதாகர் ஆகியோர் விவசாயிகள் கொண்டு வந்த பூச்சியால் பாதிக்கப்பட்ட பயிரின் பாகத்தை ஆராய்ந்து அதற்குண்டான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். மேலும் விவசாயிகளின் ஏராளமான கேள்விகளுக்கு பயிர் மருத்துவர்கள் பதிலளித்தனர்.
முன்னதாக முதல்நிலை நூலகர் பெ.வள்ளி வரவேற்றார். முடிவில் நல்நூலகர் வெங்கடேசன் நன்றி கூறினார். நல்நூலகர் சாய்ராம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில் நூலகர்கள், நூலக பணியாளர்கள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here