மருத்துவ குணங்கள் கொண்ட கொய்யா

0
2307
பலரும் அதிகம் விரும்பும் கொய்யா பழத்தில் ஏராளமான ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.
கொய்யாவில் உள்ள ‘வைட்டமின் சி’ சத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதுடன் கிருமிகள் தாக்காமல் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அளிக்கிறது.
கொய்யாப் பழத்தில் போலிக் ஆசிட், வைட்டமின் பி9 ஆகியவை இருப்பதால் கர்ப்ப காலத்தில் பெண்கள் உண்ணலாம்.
மதிய உணவுக்குப் பிறகு கொய்யாப்பழம் சாப்பிட்டால் நன்றாக ஜீரணம் ஆவதோடு, மலச்சிக்கல் நீங்கும். வயிற்றுப்புண் குணமாகும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
வயிற்றுப்போக்கு, மூட்டுவலி, அரிப்பு, மூலநோய், சீறு நீரகக் கோளாறு உள்பட பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றலும் கொய்யாவுக்கு உண்டு எனத் தெரிவிக்கப்படுகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு கொய்யா. நார்ச்சத்தும், குறைந்த சர்க்கரை அளவும் கொண்ட கொய்யாவை சர்க்கரை நோயாளிகள் தாராளமாகச் சாப்பிடலாம்.
இலைகளை அரைத்து தண்ணீரில் கலந்து பருகினால் வயிற்றுவலி, தொண்டைப்புண் போன்ற நோய்கள் குணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here